'பழைய தீர்ப்பே தொடரும்!'.. எதிர் மனுக்களை தள்ளுபடி செய்த 3 நீதிபதிகள்.. 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முதலாவதாக கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம். சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்வதற்கான அனுமதி வழங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

ஆனால் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். மேலும் இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து வழிபாடு செய்ய முயற்சித்த பல பெண்களுக்கு எதிரான போராட்டங்களும் நடந்தன.

இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  56 மறு ஆய்வு மனுக்கள், 4 ‘ரிட்’ மனுக்கள் மற்றும் 5 இடமாற்ற மனுக்கள் என மொத்தம் 65 மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ஆம் தேதி பதவி ஓய்வு பெறுகிற நிலையிலும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு வழிபாடு வரும் 17-ஆம் தேதி தொடங்கும் நிலையிலும், இவற்றுக்கெல்லாம் முன்பாகவே தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 மாதங்களுக்கு பின்னர் சபரிமலை வழக்கில் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) வழங்கப்படவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின.

அதன்படி சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு தொடரும் என்று அரசியல் சாசன அமர்வு அறிவித்துள்ளது. 3 நீதிபதிகள் இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளனர்.  அதுவரை பழைய தீர்ப்பே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்