'டாடா வாழ்நாளில் செஞ்ச பெரிய தப்பு'... 'சொன்னது உச்சநீதிமன்றம்'... பின்னணியில் இருக்கும் மூலக்கதை!
முகப்பு > செய்திகள் > இந்தியா'டாடா குழுமம் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பிலிருந்து ரத்தன் டாடா 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அப்போது அந்தப் பொறுப்புக்கு சைரஸ் மிஸ்திரி தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால் டாடா குழுமத்துக்கும் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்.சந்திரசேகரன், டாடா சன்ஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, தன்னை நீக்கியது செல்லாது எனத் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயமான என்.சி.எல்.டி.-யில் சைரஸ் மிஸ்திரி வழக்கு தொடுத்தார். ஆனால், சைரஸ் மிஸ்திரிக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. இதனால் அடுத்தகட்டமாக என்.சி.எல்.டி. தீர்ப்பாயத்தில் சைரஸ் மிஸ்திரி மேல்முறையீடு செய்தார்.
இதில், சைரஸ் மிஸ்திரியை டாடா குழுமம் நீக்கியது சட்ட விரோதம் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்பார்க்காத டாடா நிறுவனம் இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. இதில், சைரஸ் மிஸ்திரியை நீக்கியதில் எந்த தவறும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
தனது தீர்ப்பு குறித்து விரிவாகத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ''அனைத்து பிரச்னைகளையும் சைரஸ் மிஸ்திரியே வரவழைத்திருக்கிறார். முதலில் டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து மட்டுமே நீக்கப்பட்டார். ஆனால், அதன் பிறகு முக்கியமான தகவல்களை ஊடகங்களுக்குக் கசியவிட்டார். இதனைத் தொடர்ந்தே டாடா குழுமத்தின் இதர நிறுவனங்களின் பொறுப்புகளிலிருந்தும் சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். இதனால் அவர் நீக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தனக்கு கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காகச் சொந்த வீட்டையே ஒரு எரிக்கும் நிலைக்கு இது ஒப்பானது என நீதிபதிகள் கூறியுள்ளார்கள். 2012ம் ஆண்டு மிஸ்திரி பொறுப்பேற்கும் போது டாடா குழுமத் தலைமையை பாராட்டியுள்ளார். ஆனால் 2016-ம் ஆண்டு நீக்கப்படும்போது எதிரான கருத்தைக் கூறுவதை ஏற்க முடியாது.
மேலும், 18 சதவீத பங்குகள் மட்டுமே உள்ள ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாகக் குழுமத்தின் தலைவராக இருந்து, அனைத்து பொறுப்புகளை அனுபவித்த பிறகு, சிறு முதலீட்டாளர்களின் நலனுக்கு எதிராக டாடா செயல்படுகிறது எனக் கூறுவதை ஏற்க முடியாது' என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. மேலும், சைரஸ் மிஸ்திரியை தலைவராக நியமனம் செய்தது டாடா குழுமத்தின் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஊழியர்களுக்கு டபுள் டமாக்கா'... 'சம்பள உயர்வை அதிரடியாக அறிவித்த டிசிஎஸ்'... அதே பாணியில் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனங்கள்!
- இனிமேல் கொரோனா எப்படி உள்ள வருதுன்னு பார்க்கலாம்...! - 'சேஃப்டி பப்பிள்ஸ்' டெக்னாலஜியை அறிமுகப்படுத்திய பிரபல கார் நிறுவனம்...!
- 'குறைஞ்ச விலையில கொரோனா டெஸ்ட் பண்ணிக்கலாம்!'.. புழக்கத்துக்கு வரும் புதிய கருவி இதுதான்!
- "நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது!".. ரத்தன் டாடா உருக்கமான கடிதம்!.. என்ன நடந்தது?
- 'கொரோனா' பாதிப்பு நெருக்கடியால் 'அதிரடி' நடவடிக்கை... 'பிரபல' நிறுவனங்கள் வரிசையில் இணைந்த 'இந்திய' நிறுவனம்...
- 'இந்த காலேஜ் பசங்கள வேலைக்கு சேர்க்க கூடாது'... 'ரத்தன் டாடா அப்படி சொன்னாரா'?... வைரலாகும் ட்வீட்!
- டாடாவின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக்: களமிறங்கும் ஆல்ட்ரோஸ் காரின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?