அசிம் பிரேம்ஜி மீது 70 வழக்குகள் போட்ட நபர்.. உச்சநீதிமன்றத்தில் அசிம் சொன்ன வார்த்தை... என்ன மனசுய்யா..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

'விப்ரோ' நிறுவனத்தின் தலைவரும் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவருமான அசிம் பிரேம்ஜி தன் மீது 70 வழக்குகளை தொடர்ந்த சென்னையை சேர்ந்த நபரை மன்னிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார். இதனால் அவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டி உள்ளனர்.

Advertising
>
Advertising

70 வழக்குகள்

சென்னையை சேர்ந்த தொழிலதிபரான ஆர்.சுப்பிரமணியன் "சுபிக்ஷா" என்னும் வணிக நிறுவனத்தை நடத்தி வந்தார். நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி, அசீம் பிரேம் ஜி-யிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார் சும்பரமணியன். ஆனால், அசீம் பிரேம்ஜி சுப்பிரமணியனின் நிறுவனத்தில் முதலீடு செய்ய மறுத்து விட்டார்.

இந்நிலையில், அசிம் பிரேம்ஜி-யின் 45 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் அவருக்குச் சொந்தமான அறக்கட்டளை மற்றும் மற்றொரு நிறுவனத்திற்கு சமீபத்தில் மாற்றப்பட்டது. இந்நிலையில் இதில் குளறுபடிகள் இருப்பதாக 70 வழக்குகளை தொடர்ந்தார் சும்பரமணியன்.

சமரசம்

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்துவைக்க முன்வந்தது. அசிம் மீது 70 வழக்குகளை தொடர்ந்த சுப்பிரமணியனை வழக்குகளை திரும்பப் பெறச் சொல்லிய நீதிமன்றம், மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தியது.

மன்னிப்பு

இந்நிலையில், இந்த வழக்கில் சுப்பிரமணியனை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மன்னிப்பதாக அசிம் தரப்பு கூறியிருக்கிறது. இதனை அடுத்து இந்த வழக்கினை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தன்  மீது வழக்கு தொடர்ந்தவரை மன்னிப்பதாக அசிம் பிரேம்ஜி கூறியதை வரவேற்பதாகவும் அவரை பாராட்டுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துப் பேசிய நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு,"அசிம் பிரேம்ஜி இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான பார்வையை முன்னெடுத்து, ஆர் சுப்பிரமணியனின் கடந்தகால நடத்தையை மன்னிக்க ஒப்புக்கொண்டார் என்பதையும், மேலும், அவர் எதிர்கொண்ட நிதி சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தொகைகள் குறித்து கருணையுடன் பார்க்க ஒப்புக்கொண்டதையும் குறிப்பிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றனர்.

அசிம் மீது வழக்கு தொடர்ந்த சுப்பிரமணியன் உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்தலை ஏற்று, தான் தொடுத்த வழக்குகளை திரும்பப் பெறுவதாகவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட அசிம் தரப்பு," சுப்பிரமணியன் எதிர்காலத்தில் தனக்கு சட்ட சிக்கல் ஏற்படுத்தக் கூடாது' எனவும் தெரிவித்தது.

தன் மீது வழக்கு தொடுத்தவரை மன்னிப்பதாக அசிம் பிரேம்ஜி தெரிவித்ததை அடுத்து அவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டி இருப்பது தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

AZIMPREMJI, SUPREMECOURT, WIPRO, விப்ரோ, அசிம்பிரேம்ஜி, உச்சநீதிமன்றம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்