நாளை மாலை 5 மணிக்குள் ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’!.. ‘மறைமுக தேர்தல் கூடாது’.. வெளியான அதிரடி தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவிந்திர ஃப்ட்னாவிஸ் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தற்கு எதிரான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக இன்று (26.11.2019) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை (27.11.2019) மாலை 5 மணிக்குள் முதலமைச்சர் தேவிந்தர ஃபட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக இடக்கால சபாநாயகரை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை மறைமுக வாக்கெடுப்பாக நடத்தகூடாது என்றும் இடைக்கால சபாநாயகர் தலைமையில் நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்யப்பட்ட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ELECTIONS, MAHARASHTRACRISIS, MAHARASHTRAPOLITICALDRAMA, MAHARASHTRAGOVTFORMATION, SUPREMECOURT, FLOORTEST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்