'தமிழக அரசின் டாஸ்மாக் மனு' 'விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்...' 'சொன்ன காரணம் தான் ஹைலைட்டே...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, தமிழ்நாட்டில் கடந்த 7 தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இதற்கிடையே மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கக் கூடாது என பொது நல மனு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உடல் ரீதியான இடைவெளியை உறுதி செய்து விற்பனையை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியது.

கடைகள் திறக்கப்பட்ட ஒரே நாளில் 170 கோடி வசூலீட்டிய டாஸ்மாக் மனித இடைவெளியை உறுதி செய்யவில்லை. இதனால் சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக கடைகளை மூட உத்தரவிட்டது. மேலும் விற்பனையை ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை மிக விரைவாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழக அரசின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாததற்கு காரணம் என்ன என விசாரித்த போது, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் பிழை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசின் இந்த மேல் முறையீட்டு மனு பிழை கண்டறியப்பட்டு, பிழை இல்லா மனுவாக மாற்றப்பட்டு மீண்டும் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்