'இனிமேல் பணம் எடுக்க மொபைல் அவசியம்'... 'ஏடிஎம் நடைமுறையில் மாற்றம்'... அதிரடியாக அறிவித்துள்ள வங்கி!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தும் பயனர்கள் இனி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க இனி OTP அவசியம் என அந்த வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீப காலமாக ஏ.டி.எம் கார்டு மூலமாகப் பல மோசடிகள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் மோசடி செய்யும் நபர்களின் வலையில் வீழாமல் இருப்பதற்காக, பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் முறையில் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் எஸ்.பி.ஐ டெபிட் கார்டுகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையங்களில் இனி பணம் எடுக்கும் போது அவர்களது வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வருகின்ற OTP எண்ணைக் கொடுத்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும்.
தற்போதைக்கு பத்தாயிரம் மற்றும் அதற்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த OTP நடைமுறை பின்பற்றப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது நாட்டில் உள்ள அனைத்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையங்களில் வரும் 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி பணம் எடுக்க ஏ.டி.எம் மையங்களுக்குச் செல்லும் போது, அவசியம் மொபைல் போனையும் எடுத்துச் செல்ல வேண்டும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மொபைல் எண்ணை வங்கிக் கணக்கோடு இணைக்காதவர்கள் சம்மந்தப்பட்ட வங்கியின் கிளை அல்லது ஏ.டி.எம் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வரப்போகும் மிகப்பெரிய விருப்ப ஓய்வு'... 'அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள பிரபல வங்கி'... யார் யாருக்கு பொருந்தும்?
- 600 'ஏடிஎம்'ல ஆட்டைய போட்டு... வீடு, 'கார்'னு ஜாலியா இருந்துருக்காங்க... 2 வருடத்திற்கு பின் துப்பு துலங்கிய 'கேஸ்'!
- காலிப்பணியிடங்களை நிரப்பும் ‘பிரபல’ வங்கி.. வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு.. முழுவிவரம் உள்ளே..!
- 'பெட்ரோல்' விலையேற்றமே 'கண்ணை கட்டுது...' 'அதுக்குல்ல...' 'சத்தமில்லாமல்' ரிசர்வ் வங்கி செய்யப் போகும் 'காரியம்...'
- "வொர்க் ஃப்ரம் ஹோம் கேள்விப்பட்ருப்பீங்க!".. 'இது வேற லெவல்!'.. இந்திய ஊழியர்களுக்கும் அடித்த ஜாக்பாட்!
- '5,000 ரூபாய்க்கு' மேல் 'ஏடிஎம்-ல்' எடுத்தால் 'கட்டணம்!...' 'சைலண்டாக' நடக்கும் 'வேலை...' 'தகவல் அறியும் உரிமை' சட்டம் என்று ஒன்று 'இல்லை என்றால்...'
- 'ATM-ல் உதவி செய்த புண்ணியவான்!'.. 'அக்கவுண்ட்டில் இருந்து டெபிட் ஆன 50 ஆயிரம்'! புகார் கொடுக்க 'வங்கிக்கு சென்றபோது 'காத்திருந்த' அடுத்த 'அதிர்ச்சி'!
- 'ஏ.டி.எம். மெஷினை' இப்படி கூட 'பயன்படுத்தலாமா?...' 'கொரோனா நேரத்தில்...' சூப்பர் ஐடியாவை' கையில் எடுத்துள்ள 'நாடு...'
- 'அட...!' 'இந்த ஐடியா சூப்பரா இருக்கே...' "ATM ஸ்டைல்ல ரேஷன் அரிசி விநியோகம்" 'நோ பதுக்கல்...' நோ பற்றாக்குறை...' 'நோ வெய்ட்டிங்...' 'ஃபுல் சேஃப்டி...' '24 ஹவர்ஸ் சர்விஸ்...'
- இனிமேல் பணம் எடுக்க 'ஏடிஎம் சென்டர்' போக தேவையில்லை...! 'ஒரு போன் பண்ணினா மட்டும் போதும், உடனே...' கேரள அரசின் அதிரடி திட்டம்...!