ஃபிக்சட் டெபாசிட் வைத்திருப்பவரா நீங்கள்.. உங்களுக்கான ஹேப்பி நீயூஸ்.. SBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நீங்கள் வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. உங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் முதிர்ச்சிக்குப் பிறகு, வைப்பு நிதிக்கு கிடைக்கும் வட்டி குறித்த முழு விவரங்கள் இந்த தொகுப்பில் காணலாம். அண்மையில்,   ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், "ஃபிக்சட் டெபாசிட் ​​க்ளெய்ம் செய்யப்படாத கணக்குகள் தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் ஃபிக்சட் டெபாசிட் சேமிப்புத் தொகையின் மீதான வட்டி விகிதம் கணக்கிடப்படும்போது, அந்த நேரத்தில் அமலில் உள்ள சேமிப்புக் கணக்கு அல்லது நிலையான வைப்புத் தொகை மீதான வட்டி விகிதம் இரண்டில், எது குறைவாக இருக்கிறதோ, அந்த வட்டி விகிதம் கிடைக்கும்" என அறிவித்திருந்தது.

Advertising
>
Advertising

"ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம்

முதலீட்டாளர்களிடம் ரிஸ்க் இல்லாத முதலீடு எது என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் பிக்சட் டெபாசிட் திட்டம் தான். மாதங்கள் ஆண்டுகள் வரை தொடங்கும் இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் நல்ல வருவாய் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெரும்பாலும் முதலீடு செய்வார்கள். அந்த வகையில் வட்டி இந்த திட்டத்தில் பெரும் பங்கு உள்ளது. தற்போது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு எஸ்பிஐ வங்கியில் என்ன வட்டி விவரம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  பாரத ஸ்டேட் வங்கி முதிர்வு காலம் இருக்கும் வைப்பு நிதி கணக்குகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த முழு விவரங்கள்

இதுதொடர்பான முழு விவரங்கள் இங்கே காணலாம். குறைந்தது 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை வரையிலான FD கணக்குகள் முதிர்வடையும் போது, 2.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வைப்பு நிதி கணக்கு, மூன்று கால அளவுகளில் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.  46 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையிலான கால அளவு உள்ள FD கணக்குகள் முதிர்வடையும் போது, 3.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 4. 4 சதவிகிதம் வட்டி வழங்கப்படும். அதேபோன்று ஆறு மாதங்களுக்கு மேல் இரண்டு ஆண்டுகள் வரை முதிர்வு காலம் அளவு உள்ள FD கணக்குகளுக்கு 4.40 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.

கணக்கிடும் முறை

  1. 6 மாதங்களுக்கு மேல் முதல் 9 மாதங்கள் வரை
  2. 9 மாதங்களுக்கு மேல் முதல் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலம் வரை
  3. 1 ஆண்டு 1 நாளுக்கு மேல் முதல் 2 ஆண்டுகள் வரை

இவ்வாறு இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை வருட முதிர்வு காலம் அளவு உள்ள FD கணக்குகளுக்கு 5.20 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 5.70 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூன்று முதல் ஐந்து வருட முதிர்வு காலம் அளவு உள்ள FD கணக்குகளுக்கு 5.45 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 5.95 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.ஐந்து முதல் பத்து வருடம் வரை முதிர்வு காலம் அளவு உள்ள FD கணக்குகளுக்கு 5.50 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 6.30 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. வட்டி அதிகரிக்கப்படுமம் என பிப்ரவரி 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

FIXED DEPOSITE, SBI, INDIA, INTEREST HIKES, ANNOUNCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்