'ஐ லவ் யூ'னு சொல்றது பாலியல் குற்றம் இல்லை.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பை: "ஒருவரிடம் தங்களை காதலிப்பதாகக் கூறுவது பாலியல் குற்றமல்ல, அது தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம்" என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Advertising
>
Advertising

பார்த்தவுடன் காதல், பழக பழக காதல், நட்புக்கு பிறகு வரும் காதல் இதையெல்லாம் தாண்டி காதல் குறித்த கேள்விகள் பலவும் உண்டு. நீங்கள் காதலிக்கிறீர்கள் என்பதை எப்படி எப்போது உணர்ந்தீர்கள் என்பதிலிருந்து உங்களின் காதல் ஆழம் வரை பலவிதமாக காதலை வகைப்படுத்தியிருக்கிறார்கள். காதலில் விழுவது, உடலிலும் மனதிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு இளைஞன் ஒரு பெண்ணை தூரத்தில் இருந்து பார்த்தபடியே காதலித்து கொண்டிருக்கும் காலம் மாறிவிட்டது.

ஒரு பெண்ணை பிடித்திருந்தால் நேரடியாக சம்பந்தப்பட்ட பெண்ணிடம் சொல்லுவதுதான் முறை. அவ்வாறு சொல்லியும் தனது காதலை ஏற்காவிட்டால் மறந்து விடுவது, அல்லது கஜினி முகமது போல் படையெடுத்து வெற்றி பெறுவது லட்சியமாக இருக்கலாம். காதல் இருவருக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஒரு இளைஞர் சிறுமியிடம் காதலை சொல்ல முயற்சி செய்து சிறைதண்டனை வரை சென்று விடுதலை ஆன சம்பவம் அரங்கேறியுள்ளது.

மும்பையில் 22 வயது நிறைந்த இளைஞர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த சிறுமியை பிடித்திருந்ததால் ஐ லவ் யூ என்று கூறியுள்ளார். காதலை ஏற்க மறுத்த சிறுமி, இதுகுறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியும் அவரது தாயாரும் இளைஞர் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில்  போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம்  நீதிபதி கல்பனா பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி. 'ஒரு சந்தர்ப்பத்தில்  ஒருவரிடம் மற்றொருவர் 'ஐ லவ் யூ' என்று கூறுவது தன்னுடைய உணர்வுகளை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துவது. உள்நோக்கத்துடனும், பாதிக்கப்பட்டவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து சென்று அவ்வாறு கூறுவது தான் சட்டப்படி குற்றம்.

குற்றம் சாட்டப்பட்டவர் உள்நோக்கத்துடனும், சிறுமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பாலியல் உள்நோக்கத்துடனும் இதனை செய்துள்ளார் என்பதை நிரூபிக்கவில்லை" என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை விடுவித்து உத்தரவிட்டார்.

MUMBAI COURT, I LOVE YOU, LOVE PROPOSE

மற்ற செய்திகள்