'இவரா வாதாட வராரு, இனி கேஸ் என்ன ஆகுமோ'... 'அதிர்ந்துபோன அதிகாரிகள்'...'ஷாருக்கான் மகனுக்காக களமிறங்கும் வக்கீல்'... ஒரு நாள் பீஸ் மட்டுமே இவ்வளவா?
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் ஆஜராகப் போகும் வழக்கறிஞர் குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கான் சமீபத்தில் மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 23 வயதான ஆர்யன் கான், ஷாருக்கானின் மகன் என்பதால் இந்த வழக்கு இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஆர்யன் கான் சார்பில் வழக்கறிஞர் சதீஷ் மானேஷின்டே என்பவர் ஆஜராக உள்ளார். ஆர்யன் கானுக்காக இவர் ஆஜராகப் போகிறார் எனத் தெரிந்ததும் இந்த வழக்கு தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. சதீஷ் மானேஷின்டே ஆஜராகப் போகிறார் எனத் தெரிந்ததும் அதிகாரிகள் பலரும் பரபரப்படைய ஆரம்பித்துள்ளார்கள்.
யார் இந்த சதீஷ் மானேஷின்டே அவரது பின்னணி என்ன, அவர் இதற்கு முன்னர் யாருக்காக எல்லாம் ஆஜராகி உள்ளார் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். கர்நாடக மாநிலம் தார்வாத் பகுதியில் பிறந்த சதீஷ் மானேஷின்டே, மும்பையில் சட்டம் பயின்றவர். பின்னர் கடந்த 1983களில் இவர் இந்தியாவின் பிரபலமான வக்கீலான ராம் ஜெத்மெலானியிடம் ஜூனியராக பணியாற்றினார்.
10 ஆண்டுகள் ராம் ஜெத்மெலானியியோடு பயணித்த சதீஷ் மானேஷின்டே, அவரின் சட்ட நுணுக்கங்கள், வழக்கைக் கையாளும் விதம் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். பின்னர் தனியாக வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கிய சதீஷ் மானேஷின்டே, பல முக்கிய அரசியல் தலைவர்கள், நடிகர்கள், மற்றும் பல பிரபலங்களின் வழக்குகளை வெற்றிகரமாகக் கையாண்டு, இந்தியாவின் பிரபலமான கிரிமினல் வக்கீல் என்ற அந்தஸ்தை சதீஷ் மானேஷின்டே பெற்றார்.
இதனால் பாலிவுட்டின் முக்கிய புள்ளி என்ற நிலைக்கு சதீஷ் மானேஷின்டேஉயர்ந்தார். குறிப்பாக 1993ம் ஆண்டு மும்பை வெடிகுண்டு வழக்கில் சிக்கிய சஞ்சய் தத்திற்கு இவர் தான் வக்கீலாக செயல்பட்டார். அவருக்கு ஜாமீனும் பெற்றுக்கொடுத்தார்.
சஞ்சய் தத் 2007ம் ஆண்டு சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஆதரவாக பணியாற்றிய வக்கீல் குழுவில் இவரும் இருந்தார். சஞ்சய் தத்திடம் இருந்த செல்வாக்கு மூலம், சல்மான்கானுக்காக ஆஜராகி அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவர் இறந்த வழக்கில் சல்மான்கானுக்கு ஆஜராகி அவருக்கு ஜாமீனும் பெற்றுத் தந்தார்.
சதீஷ் மானேஷின்டேவை சாதாரணமானவர்கள் அவ்வளவு எளிதில் அணுக முடியாது. காரணம் அவர் வாங்கும் பீஸ் தான். இந்தியாவின் மிகப்பெரிய கிரிமினல் வக்கீலாக இருக்கும் சதீஷ் மானேஷின்டே, பல முக்கியமான பிரபலங்களுக்கு நம்பிக்கைக்குரிய வக்கீலாகவும் உள்ளார். இதனால் ஒரு முறை ஆஜராவதற்கு ரூ10 லட்சம் வரை வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.
சதீஷ் மானேஷின்டேவை அணுகுபவர்கள் சமூகத்தில் முக்கிய புள்ளியாக இருப்பதால், அவர்களுக்கு இந்த பீஸ் ஒரு பெரிய கஷ்டமாக இருக்கப் போவதில்லை. முக்கிய பிரபலங்களுக்கு வழக்கறிஞராக மட்டும் இல்லாமல், பிரபலமான மற்றும் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய பல வழக்குகளை இவர் கையாண்டுள்ளார்.
குறிப்பாக மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயா நாயக் வழக்கு, புக்கீ சோபன் மேத்தா வழக்கு, சோட்டா ராஜனின் மனைவி சுஜாத்தா நிக்கல்ஜின் ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற வழக்கு, ராக்கு சாவத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு எனப் பல முக்கிய வழக்குகளைக் கையாண்டுள்ள சதீஷ் மானேஷின்டே, மீண்டும் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகனுக்காக ஆஜராக உள்ளதால், இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கும் எனச் சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உல்லாச கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி.. ‘அது யாரு ஷாருக்கான் மகன் தானே..?’ 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது.. பாலிவுட்டை பரபரப்பாக்கிய சம்பவம்..!
- 'முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிகுண்டு'... 'மாசம் 100 கோடி மாமூல்'... 'எங்கே போனார் முன்னாள் மும்பை கமிஷனர்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள லுக்அவுட் நோட்டீஸ்!
- கோர்ட்ல 'விசாரணை' நடந்திட்டு இருந்தப்போ... சைலன்டா கையில 'புல்லாங்குழலோட' உள்ள வந்த நபர்...! 'என்ன நெனச்சாரோ தெரியாது, திடீர்னு...' - அரண்டு போன ஜட்ஜ்...!
- 'True Caller-ல் இருந்த அந்த பெயர்'... 'இம்மி பிசகாமல் அளந்து விட்ட கம்பி கட்டுற கதை'... நடிகர் ஆர்யா வழக்கில் தலைசுற்ற வைக்கும் ட்விஸ்ட்!
- இந்த மாதிரி 'ஸ்டிக்கர்' ஒட்டியிருக்க... வண்டிகள பிடிச்சு உடனே 'அத' பண்ணிடுங்க...! - அதிரடி உத்தரவு...!
- 'சார், இது 'No Parking'... 'தூக்கு என்னையும் சேத்து தூக்கு, சவால் விட்ட இளைஞர்'... 'இணையத்தில் வைரலான வீடியோ'... உண்மையில் நடந்தது என்ன?
- 'காவல்துறையில் கம்பீரமாக பணிபுரிந்த ஆப்கான் பெண்!.. வேலைக்கு போன குற்றத்திற்காக... ஈவு இரக்கமற்ற தாலிபான்களின் கொடூரச் செயல்'!
- தோண்ட தோண்ட வெளிவரும் சர்ச்சை வீடியோக்கள்!.. மீரா மிதுனின் சேனலைப் பார்த்து... சைபர் கிரைம் போலீஸ் யூடியூப் நிறுவனதுக்கு அவசர கடிதம்!
- "மாத்தி மாத்தி பேசுறாங்க"!.. போலீசாரையே சுத்தலில் விட்ட மீரா மிதுன்!.. புதிய யுக்தியை கையிலெடுத்த சைபர் கிரைம் காவல்துறை!
- மீரா மிதுனின் Boy friend-ஐயும் தூக்கிய போலீஸ்!.. தலைமறைவாக டூயட் பாடிய ஜோடி... தமிழ்நாடு காவல்துறையிடம் சிக்கியது எப்படி?.. யார் அந்த Boy friend?