‘இந்த தேர்தல் ரொம்பவே ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா?’.. சச்சினின் வைரல் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்குப்பதிவு செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்துவரும் நிலையில், வட இந்தியாவில் 9 மாநிலங்களில் உள்ள 71 மக்களவைத் தொகுதிகளில் 4-ஆம் கட்ட தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் மகாராஷ்ட்ராவில் 17 தொகுதிகளிலும், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தலா 13 தொகுதிகளிலும், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 10க்கும் குறைவான தொகுதிகளிலும், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விறுவிறுவென வாக்குப்பதிவுகள் நடந்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்ததோடு, விரல்களில் வாக்குப்பதிவு செய்த மைக்கறையை காண்பித்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தும் வருகின்றனர்.
இந்த சூழலில், மும்பையில் உள்ள பாந்த்ரா எனும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலி, மகள் சாரா மற்றும் மகன் அர்ஜூன் உள்ளிட்ட தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். இதுபற்றி தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், தனது மகள் சாரா மற்றும் தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இருவரும் முதல் முறையாக ஓட்டு போட்டதால், இந்த நாடாளுமன்றத் தேர்தல் தனக்கு ஸ்பெஷலானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அனைவரும் சென்று ஓட்டு போடுங்கள் என்று பொதுமக்களுக்கும் வலியுறுத்தியுள்ளார். தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு, அந்த மைக்கறை விரலுடன் நின்று குடும்பத்துடன் போஸ் கொடுத்த சச்சினின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “என்ன? நான் சொல்ற கட்சிக்கு ஓட்டு போடமாட்டியா?”.. மனைவிக்கு கணவரின் கொடூர தண்டனை!
- 'தலைவர்கள் காலில் விழுந்த மோடி'...'இதுதான் காரணமா'...ஒரே ஒரு போட்டோவால் 'ட்விட்டரில் சண்ட'!
- தேர்தல் நன்னடத்தை விதிகளுக்காக, பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் செய்துள்ள ‘அதிரடி’ காரியம்!
- ‘ஒரு வழியாக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த பிரதமர் நரேந்திர மோடி’!
- தேர்தல் ஜனநாயக கடமை.. மலேசியாவிலிருந்து தனி விமானம்.. பறந்து வந்து வாக்களித்த பில்லியனர்!
- ‘எனக்கு டிக்கெட் இல்லன்னா, அப்புறம் கட்சியவிட்டே போயிருவேன்’.. சொன்னபடி செஞ்ச பாஜக எம்.பி!
- ‘ஏது பாம்பா?’.. ஒப்புகைச் சீட்டு எந்திரத்துக்குள் இருந்த பாம்பு.. அலறி ஓடிய வாக்காளர்கள்!
- 'பசு'வோட சிறுநீரை குடிச்சேன்'...'புற்று நோய்' குணமாயிடுச்சு...'பசுவை' தடவுங்க...இதுவும் குணமாகும்!
- 'களத்துல இறங்குறதுனா இதுதான்'...'சலுயூட்' போட வைத்த 'இளம் கலெக்டர்'...வைரலாகும் வீடியோ!
- உயிருக்கு போராடிய தேர்தல் அதிகாரி.. '45 நிமிஷம் போனில் கேட்டு முதலுதவி செய்த CRPF வீரர்'!