Video: 'பூமழை பொழிந்து' மலர்மாலைகள் அணிவித்து ... துப்புரவு தொழிலாளிக்கு கிடைத்த 'மிகப்பெரிய' கவுரவம்... நெஞ்சை 'உருக்கும்' வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் துப்புரவு தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊடகத்துறையினர், போலீசார், அரசு அதிகாரிகள் என பலரும் மக்கள் நலன் கருதி தங்கள் சேவைகளை இரவு-பகல் பாராது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் துப்புரவு தொழிலாளி ஒருவருக்கு பூமழை பொழிந்து, மலர்மாலைகள் அணிவித்து பொதுமக்கள் அவரை கவுரவப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாவட்டம் பாட்டியாலா மாவட்டம் நாபா என்னும் பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளிக்கு பூமழை பொழிந்தும், மலர்மாலைகள் அணிவித்தும் தங்களது நன்றியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த வீடியோவை பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு,'' கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போரில் முன்னணி வகிக்கும் நமது வீரர்களை உற்சாகப்படுத்துவோம்,'' என தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோவை இதுவரை சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்