என்னடா பண்ணி வச்சிருக்கீங்க... சமோசாக்குள்ள 'இத' எப்படிடா வச்சு சாப்பிடுறது..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சமோசா தான். அந்த சமோசாவையே வெறுக்க வைத்துவிடும் போலிருக்கு இந்தப் புது காம்பினேஷன் என நெட்டிசன்கள் குமறுகின்றனர்.

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க... சமோசாக்குள்ள 'இத' எப்படிடா வச்சு சாப்பிடுறது..?
Advertising
>
Advertising

சமுக வலைதளங்களில் திடீரென ஒரு உணவு ரகம் அல்லது உணவு முறை வைரல் ஆவதும் அதை நம் சமுகம் கொண்டாடுவதும் சமீப காலங்களில் அதிகம் நடந்து வருகிறது. உணவில் பல சாகச முயற்சிகளையும் நம்மவர்கள் ஒரு கை பார்த்துவிடுகிறார்கள். அப்படி ஒரு சாகச உணவை தான் தற்போது நெட்டிசன்கள் சமுக வலைதளங்களில் கடுமையாகத் தாக்கி வருகிறார்கள்.

samosa stuffed with this sweet is not all attractive

இந்தியர்களுக்கு சமோசா என்பது தவிர்க்கமுடியாத ஒரு ஸ்நாக்ஸ். அதேபோல் ஸ்வீட்டுகளில் மிகவும் எளிமையானதும் பிடித்தமானதும் குலாப் ஜாமுன் ஆகத் தான் இருக்கும். பால் ஸ்வீட் பிடிக்காதவர்கள் கூட குலாப் ஜாமுனை பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்தியர்களின் உணவு கலாச்சாரத்தில் உயரத்தில் இருந்த 2 பொருட்களை இன்று கழுவி ஊற்றும் அளவுக்கு செய்துள்ளது ஒரு காம்பினேஷன்.

சமோசாக்குள் என்னவெல்லாம் வைத்து சாப்பிடுவோம்? உருளைகிழங்கு மசாலா, பட்டாணி மசாலா, பல வித சுண்டல்களை போட்டு மசாலா செய்து உள்ளே வைத்து மொரு மொரு சமோசா தானே சாப்பிடிருப்போம். ஃபுட் ப்ளாகர் ஒருவர் டெல்லியில் ஒரு இடத்தில் புதுமையான ஒரு காம்பினேஷன் கொண்ட சமோசாவை சாப்பிட்டு அதற்கு ரிவ்யூ போட அது வைரல் ஆக அந்த உணவை இப்போது ஒட்டுமொத்த இந்தியாவும் சபித்து வருகிறது.

டெல்லியில் ஒரு இடத்தில் குலாப் ஜாமுனை சமோசாக்குள் வைத்து பொறித்து எடுத்து விற்கிறார்கள். டிக்டாக்கில் மிகவும் பிரபலமான ‘OH NO…!’ பாடல் தான் இந்த குலாப் ஜாமுன் சமோசாவை சாப்பிடுபவர்களுக்கு டெடிகேட் செய்ய வேண்டும். இந்த காம்பினேஷனை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

சமோசா பிரியர்கள் பலரும் சமோசாவின் மரியாதையே போய்விட்டதாக சமுக வலைதளங்களில் புலம்பி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2K KIDS, SAMOSA, GULAB JAMUN, INDIAN SNACKS, சமோசா, குலாப் ஜாமுன், இந்திய ஸ்நாக்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்