ஆர்யன் கானை 'ரிலீஸ்' பண்ண 'ரூ.25 கோடி' கேட்டு மிரட்டுனீங்களா...? '8 மணி நேரம் நடந்த விசாரணை...' - 'சமீர் வான்கடே' அளித்துள்ள வாக்குமூலம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி கேட்டு வான்கடே மிரட்டியதாக கூறிய முக்கிய சாட்சியிடம் 8 மணி நேரம் போலீசார் வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

Advertising
>
Advertising

மும்பை அருகே கப்பலில்  போதை பொருள் பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் (NCB) நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் இம்மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். இது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் இருந்து ஆர்யன்கானை மீட்டெடுக்க ரூ.25 கோடி கேட்டதாக என்சிபி அதிகாரி சமீர் வான்கடே மீது அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், என்சிபி மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் மீது பணம் கேட்டு மிரட்டியதாக 4 புகார் மனுக்கள் வந்துள்ளதாக மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த 4 மனுக்களில் ஒன்றாக வழக்கின் முக்கிய சாட்சியான பிரபாகர் செயில் என்னும் நபரால் அனுப்பப்பட்டிருந்தது.

இவர் நேற்று முன்தினம் (26-10-2021) மாலை மும்பை காவல் துறையினரிடம் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் நேற்று (27-10-2021) அதிகாலை 3 மணி வரையில் சுமார் 8 மணி நேரமாக பதிவு செய்யப்பட்டது.

அமைச்சர் நவாப் மாலிக்கால் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக மகாராஷ்டிரா விஜிலென்ஸ் குழு, வான்கடேவிடம்  நேற்று 4 மணி நேரம் விசாரித்ததாகவும்,  பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் முறையான பதில் அளிக்கவில்லை எனகூறப்படுகிறது.

மேலும், ஷாரூக்கான் கடந்த 2011-ஆம் ஆண்டு குடும்பத்தினருடன் ஹாலந்து, லண்டன் சென்று விட்டு மும்பைக்கு திரும்பினார். அப்போது, சுங்கத்துறை உதவி கமிஷனராக இருந்த வான்கடே, ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட நட்சத்திரங்களை சோதனை செய்து, வெளிநாட்டு பொருட்கள், நகைகளுக்கு சுங்க வரி செலுத்தாமல் இருந்ததை கண்டுபிடித்தார். மொத்தம் 20 லக்கேஜ்களுடன் வந்த ஷாரூக்கானிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார். கடைசியில், சுங்க வரியாக ரூ.1.5 லட்சம் செலுத்திய பிறகே விடுவித்துள்ளார்.

மேலும், தன்னை  ஒரு முஸ்லிம் என கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து வான்கடே அளித்துள்ள விளக்கத்தில், ‘2006-ஆம் ஆண்டில் டாக்டர் சபானா குரேஷி என்பவரை திருமணம் செய்தேன். பின்னர், நீதிமன்றம் மூலம் 2016-ஆம் ஆண்டில் விவகாரத்து நடந்தது. மேலும் 2017-ல் மராத்தி நடிகை கிராந்தி ரெட்காரை திருமணம் செய்தேன்.

தனது தாய் ஒரு முஸ்லிம், தந்தை இந்து. எனது தாயின் விருப்பப்படிதான் நான் முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்தேன். எனக்கு உருது தெரியாது. முஸ்லிம் முறைப்படி நடந்த திருமண சான்றிதழில், எனது பெயர் எப்படி எழுதப்பட்டிருந்தது என எனக்கு தெரியாது,’ என கூறியுள்ளார்.

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை, மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்றும் நடந்தது. இவருடன் கைது செய்யப்பட்டுள்ள அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்மும் தமேச்சாவின் ஜாமீன் மனுக்களும் தீவிரமாக விசாரிக்கப்பட்டன. மூன்று பேரின் வாதங்களும் நேற்றுடன் முடிவடைந்தது. தேசிய போதை பொருள் தடுப்பு துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் அனில் சிங் இன்று வாதிடுகிறார். இதனைத் தொடர்ந்து, நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்