‘பட்டப்பகலில்’ அரசியல் பிரமுகர், அவரது மகன் ‘சுட்டுக்கொலை’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி அரசியல் பிரமுகரையும், அவரது மகனையும் இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாம்சோய் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சாலை போடப்பட்டு வந்தது. அப்போது சாலை அமைக்கும் பணிகள் வயலை ஆக்கிரமித்து நடைபெறுவதாக கூறி வயலின் உரிமையாளர், உள்ளூர் சமாஜ்வாடி கட்சி பிரமுகரான சோட் லால் திவாகரிடம் தகராறு செய்துள்ளார்.
இதனை அடுத்து சமாஜ்வாடி கட்சி பிரமுகர் சோட் லால் மற்றும் அவரது மகன் சுனில் ஆகியோர் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்ய சென்றுள்ளனர். அப்போது வயலின் உரிமையாளர்கள் இருவருடன் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே அவர்கள், சோட் லாலையும், அவரது மகன் சுனிலையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து துப்பாக்கி சுட்டுக்கொலை செய்த ஜித்தேன்ர ஷர்மா, ஷர்மேந்திர ஷர்மா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பட்டப்பகலில் பலர் முன்னிலையில் அரசியல் பிரமுகரும், அவரது மகனும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சரக்கை' சரிசமமாக பிரிப்பதில் தகராறு... 'மனைவியை' கொன்ற கணவன்... 'கணவனை' கொன்ற மனைவி!
- 'திறந்த' லாரியில் தொழிலாளர்கள் 'சடலங்களுடன்' பயணம்... ஒட்டுமொத்த நாட்டையும் 'உலுக்கிய' சம்பவம்!
- ‘லாரி டயர் வெடித்து விபத்து’.. 3 வெளிமாநில தொழிலாளர்கள் பலி.. அடுத்தடுத்து நடக்கும் சோகம்..!
- வேணாம் விட்ருன்னு எவ்வளவோ 'கெஞ்சினாங்க'... ஆனா நாங்க கேட்கல...மருமகன் போலீசில் 'கண்ணீர்' வாக்குமூலம்!
- 'சிதைச்சு' போட்டுட்டு போய்ட்டாங்க... மோட்டார் சைக்கிளில் வந்த 'கள்ளக்காதல்' ஜோடிக்கு... 'மதுரை' அருகே நிகழ்ந்த பயங்கரம்!
- ‘ஒரே நைட்டில் 19 கொலை’.. ‘ஹிட்லர்’ ஸ்டைலை பாலோ பண்ணேன்.. போலீஸை மிரளவைத்த இளைஞர் வாக்குமூலம்..!
- ‘சித்தியுடன் தகாத உறவு’.. கண்டித்த அத்தைக்கு ‘கத்திக்குத்து’.. சென்னையை அதிரவைத்த கொலையின் பகீர் பின்னணி..!
- லாரியில் 'நின்றுகொண்டே' பயணம்... நடுவழியில் 'இறக்கி' விடப்பட்ட கொடுமை... உயிர் 'நண்பனுக்கு' நேர்ந்த துயரம்!
- படுக்கையறையில் 'பிணமாக' கிடந்த மனைவி... 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து 'கணவர்' தற்கொலை... 'அடுக்கடுக்காக' காத்திருந்து அதிர்ச்சிகள்!
- 200 கிமீ நடந்து ‘கால் வலி’.. ‘லிப்ட்’ கேட்டு லாரியில் ஏறிய அரைமணி நேரத்தில் விபத்து’.. 24 பேர் பலியான கோரவிபத்தின் பகீர் பின்னணி..!