நிரந்திரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற விரும்பும் பணியாளர்களுக்கு சம்பள கட்டுமானத்தில் சில மாறுதல்களைக் கொண்டு வர மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நிரந்தர Work From Home கேட்கும் பணியாளர்களுக்கு ஊதியத்தில் மாறுதல்கள் செய்ய நிறுவனங்களுக்கு அனுமதி தரும் முடிவில் இருக்கிறது மத்திய தொழிலாளர் அமைச்சகம். வீட்டு வாடகை அலவன்ஸ் போன்றவற்றை க்ளைம் செய்து கொள்ளும் வசதிகள் இனி வரும் காலங்களில் குறையும் எனத் தெரிகிறது. இதுதொடர்பான மாற்றங்களே விரைவில் மத்திய அமைச்சகத்தால் அமல் செய்யப்படுகிறது.
அதேபோல், வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் பணியாளர் ஒருவரும் ஏற்படும் கூடுதல் செலவுகளை எப்படி சரிக்கட்டுவது என்பது தொடர்பான மாறுதல் உத்தரவுகளும் நிறுவனங்களுக்குப் பிறப்பிக்கப்பட உள்ளது. ஆக, மத்திய தொழிலாளர் அமைச்சகம், பணியாளர் மற்றும் நிறுவனம் சார்ந்து இரு தரப்புகளையும் யோசித்துப் பலன் அளிக்கும் வகையிலான ஒரு முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம், வீட்டில் இருந்து பணியாற்றுவதால் பணியாளர்களுக்கு கட்டுமான செலவுகள், மின்சாரம், இணைய சேவை என நிறுவனம் ஈடுகட்டுவதற்கான செலவுகள் அதிகம் இருக்கின்றன. அதேபோல், வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்பதால் பலரும் முக்கிய மெட்ரோ நகரங்களை விட்டு வெளியேறி இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் சென்று வசிக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் வாழ்வாதார செலவுகள் பணியாளர்களுக்குக் குறையும் என்பதையும் பணி அமர்த்தும் நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.
இதனால், நிச்சயமாக இந்த க்ளைம் செய்யப்படும் பணம், அலவன்ஸ் பணம், ப்ரொஃபெஷனல் வரி உள்ளிட்டவைகளில் மாறுதல்கள் ஏற்படும். வரிச்சுமை நிச்சயமாகப் பணியாளர்களுக்குக் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை ஊதியம் எப்படிக் கட்டமைக்கப்படப் போகிறது என்பதே அனைவரும் காத்திருக்க வேண்டிய தகவல் ஆக இருக்கும்.
மற்ற செய்திகள்
'இனிமே தான் தரமான சவால்கள் எல்லாம் காத்திட்டு இருக்கு ஷ்ரேயாஸ்'- கங்குலியின் எச்சரிக்கையா? ஆலோசனையா?
தொடர்புடைய செய்திகள்
- வேலூர் நகை கடை கொள்ளை... சிசிடிவி கேமராவில் ஸ்பிரே.. சுவர் ஓரத்தில் 'விக்'.. எப்படி நடந்தது?
- குடும்ப பிரச்னைகளுக்குத் தீர்வு… ஆயிரக்கணக்கில் வாரிச்சுருட்டிய போலி சாமியார் கைது..!
- வெறும் 72 மணி நேரத்தில் ரூ.6504 கோடிகளை அள்ளிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. எப்படி?
- உலகின் மிக விலை உயர்ந்த விவாகரத்து... பில்லியன் டாலர்களில் ஜீவனாம்சம் தரும் ரஷ்யாவின் விளாடிமிர் பொடனின்
- இனி இணைய வசதி இல்லாமலேயே டிஜிட்டல் பேமண்ட் செய்யலாம்... RBI அசத்தல் அறிமுகம்!
- வறுமை கோட்டுக்குக் கீழ் ‘இத்தனை’ சதவிகிதம் பேரா? இந்தியாவின் ஏழை மாநிலங்கள் பட்டியல்… தமிழ்நாடு எத்தனையாவது இடம் தெரியுமா?
- சேமிப்புக் கணக்கு முதல் UPI, RuPay வரையில்… எது எதுக்கு என்ன ‘சார்ஜிங் கட்டணம்’..?- SBI விளக்கம்!
- 'ஷிஃப்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் மெசேஜ், போன் எல்லாம் பண்ணக்கூடாது'- டீம் லீடர்களுக்கு கண்டிஷன் போட்ட ‘நாடு'..!
- நடுரோட்டில் 'குவிந்து' கிடந்த பணம்...! 'யாரும் கிட்ட போகாம தள்ளி நின்னு வேடிக்கை பார்த்த மக்கள்...' - என்ன நடந்தது...?
- 'தாலிபான்கள் உள்ள நுழைஞ்சிட்டாங்க...' கெடச்ச சின்ன கேப்ல எப்படி 'எஸ்கேப்' ஆனார்...? 'மின்னல் வேகத்தில் போட்ட பிளான்...' - வெளியாகியுள்ள 'பரபரப்பு' தகவல்...!