"கொரோனாவால கம்பெனிகள் எல்லாம் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு பண்ணிகிட்டு இருக்கு!".. ஆனா இந்த நிறுவனம் பண்றத பாருங்க! வேறலெவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்த கொரோனா சூழலில் உலகமே பொருளாதார சரிவால் முடங்கியுள்ள நிலையில், பல நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்யவும், சம்பளத்தை குறைக்கவும் செய்துள்ளன.
இந்தியாவைப் பொருத்தவரை மில்லியன் கணக்கானோர் வேலையை இழந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இந்தியாவின் பல்வேறு கூட்டுத் தயாரிப்புகளைச் செய்துவரும் சஹாரா குழும நிறுவனம் அவ்வாறு தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவில்லை மற்றும் சம்பளக் குறைப்பு செய்யவில்லை என்பதுடன், மாறாக கூடுதல் ஊழியர்களை வேலைக்கு எடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு புரொமோஷனும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரொமோஷனும் வழங்கப்பட்டுள்ளது. 14 லட்சம் ஊழியர்களைக் கொண்டு சஹாராக் குழும நிறுவனம் கண்டிப்பாக தமது நிறுவனத்தில் ஆட்குறைப்பு மற்றும் சம்பளக் குறைப்பு இருக்காது என உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இதுபற்றி பேசிய சஹாரா குழும முதன்மை அதிகாரி, சுபத்ரா ராய், “இதுபோன்ற இக்கட்டான சூழலில்தான் நிறுவனங்கள் தம் குடும்ப ஊழியர்களின் பொருளாதார மற்றும் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்த சூழலில் அவர்களைப் பார்த்துக்கொண்டால், அதுதான் மனிதநேய ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நாம் ஆற்றும் பெரும் பங்கு என்பதும் அதனால் நிறுவனத்துக்கு அவர்கள் பெரும்பங்கு ஆற்றுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது” என்று அவர் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவிற்கு மத்தியிலும்... ஐடி ஊழியர்களுக்கு 'நல்ல' செய்தி சொன்ன 'பிரபல' நிறுவனம்!
- 'செலவைக்' குறைக்க அதிரடி முடிவு... 10,000 ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்!
- ‘அரசு வேலைக்கு ஆசை’!.. மகன் போட்ட ‘மாஸ்டர்’ ப்ளான்.. விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..!
- இவங்களுக்கும் 'ஊதியம் பிடித்தமா...?' 'தமிழகம்' முழுவதும் 'நாளை போராட்டம்..!'
- 'விருப்பமில்லாமல் 6,770 பேர்.. தானாக 5,520 பேர்'.. '12 ஆயிரம் ஊழியர்கள் வேலைநீக்கம்'.. ஆனாலும் அடுத்த 'குண்டை' தூக்கிப் போடும் 'ஏர்லைன்ஸ்' நிறுவனம்!
- கொரோனாவால் வேலையிழப்பா?.. 50 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்க காத்திருக்கும் 'அமேசான்'!.. முழு விவரம் உள்ளே
- 'நிரந்தரமாக.. வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணா'.. 'ஃபியூச்சர்ல இந்த பிரச்சனையெல்லாம் வரும்!'.. 'ஷாக்' கொடுத்த 'CEO'!
- சம்பளத்தை உயர்த்திய பிரபல நிறுவனம்...! 'நிறைய கம்பெனியில வேலைய விட்டே தூக்கிட்டு இருக்காங்க...' இங்க மட்டும் எப்படி...?
- ஊழியர்களை 'வேலையை' விட்டு தூக்கி... 'சம்பளத்திலும்' 50% கைவைத்த 'முன்னணி' நிறுவனம்!
- உங்களோட 'லாஸ்ட்' வொர்க்கிங் டே ... 3 நிமிடங்கள் மட்டுமே பேசி... 3700 பேரை 'தூக்கிய' நிறுவனம்!