'இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும்...' 'நீங்க பார்வையாளர்கள் தான், பங்கேற்பாளர்கள் இல்ல...' - விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்துக்கு டெண்டுல்கர் கடும் எதிர்ப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வேளாண் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு சச்சின் டெண்டுல்கர் தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக 60 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், பாடகி ரிஹானா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையில் இதுவரை எந்த சமூகவலைத்தளத்திலும் விவசாயிகள் போராட்டத்தை குறித்து பேசாத சச்சின் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் 'இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம், ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும், ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும்' என ட்விட் செய்துள்ளார்.

 

இந்த ட்விட் தற்போது இணையத்தில் வைரலாகியும், பகிரப்பட்டும் வருகிறது. மேலும், சுரேஷ் ரெய்னா மற்றும் பாலிவுட் திரைப்பட நடிகர்களான அக்சய் குமார், கரண் ஜோகர் உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்களுக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்