சபரிமலையில்.. புலி வாகனம் மீது ஐயப்பன் வேடமணிந்து கம்பீரமாக வலம் வந்த சிறுமி

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திபெற்ற ஐயப்பன் திருக்கோவில். கார்த்திகை மாதம் முதல் நாள் துவங்கிய உடனேயே பக்தர்கள் சபரிமலைக்கு இருந்து சாமி தரிசனம் செய்ய துவங்குவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுகளுக்கான கோவில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. அது முதலே லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | "டிராவிட் தான் கேப்டன், ஆனா தோனிகிட்ட தான் ஐடியா கேப்பேன்".. சச்சின் உடைத்த சீக்ரெட்.. அப்பவே அப்படியா?

மேலும் அளவுக்கு அதிகமான பக்தர்கள், நாளுக்கு நாள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், கூட்ட நெருக்கடியை பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 24 லட்சம் பேர் ஐயப்பனை தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ள நிலையில், 23 லட்சம் பேர் வரை தரிசனம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் மண்டல பூஜை டிசம்பர் 27 ஆம் தேதியன்று  நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள 40,000 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இந்த நிலையில், சமீபத்தில் தேவசம் போர்டு சார்பாக ஐயப்பன் கோவிலில் கற்பூர பவனி நடைபெற்றது. தந்திரி கண்டரு ராஜீவரு கோவில் கோபுரம் முன் கற்பூர தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, நையாண்டி மேளம், செண்டை மேளம், கொட்டு வாத்தியம் முழங்க குத்து விளக்கு மயிலாட்டம் ஊர்வலம் சன்னிதி முழுவதும் வலம் வந்து பதினெட்டாம் படி முன்னால் நிறைவு பெற்றது.

இதற்கு மத்தியில், ஐயப்பன் வேடம் அணிந்த சிறுமி புலி வாகனத்தில் எடுத்து வரப்பட்டார். ஐயப்பன் கோவிலில் நடந்த கற்பூர தீப பவனி சிறப்பாக நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "CSK-ல இருந்தப்போ இப்டி தான் நடத்துனாங்க".. இரண்டே வாரத்தில் கிளம்பிய அயர்லாந்து வீரர்.. அவரே சொன்ன பரபரப்பு தகவல்!!

KERALA, SABARIMALAI, AYYAPPAN KOVIL, SABARIMALAI AYYAPPAN KOVIL, KARPOOR BAVANI FESTIVAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்