இந்தியாவில் 'ஒமைக்ரான்' வைரஸ் 'என்ன' பண்ண போகுது...? - தென் ஆப்பிரிக்க நிபுணர் 'அதிர்ச்சி' தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனாவின் திரிபு வைரசான ஒமைக்ரான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என முதன்முதலில் ஒமைக்ரானை கண்டுபிடித்த தென் ஆப்பிரிக்க நிபுணர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அது பல திரிபுகளாக உருமாறியுள்ளது. கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் உலகளவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் புதிதாக ஒமைக்ரான் வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டது. இதனை தென்ஆப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏஞ்சலிக் கோயட்சி என்பவர் முதன் முதலில் கண்டுபிடித்தார்.
தற்போது உலகளவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகளவில் இருந்துவருகிறது ஆனால் இந்த ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரஸை விட மக்களுக்கு குறைந்த பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது. இந்நிலையில் இந்த ஒமைக்ரான் குறித்து இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டாக்டர் ஏஞ்சலிக் கோயட்சி தென்ஆப்பிரிக்காவில் இருந்து தொலைபேசி மூலம் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், 'இதுவரை ஒமைக்ரான் மக்களை பயப்படவைக்கவில்லை. ஆனால் கடந்த அலையை காட்டிலும் இது வேகமாக பரவி வருகிறது.
ஒமைக்ரானின் ஒரே நோக்கம், வெதுவெதுப்பான உடலை தாக்கி, அங்கு வசிப்பதுதான். முதலில் ஒமைக்ரான் குழந்தைகளை தான் தாக்கும். அதோடு வைரஸின் தாக்கம் ஒரு 5 அல்லது 6 நாட்களில் சரியாகிவிடும்.
இதனால் நாம் இந்த வைரஸை பொறுப்பில்லாமல் எதிர்கொள்ள முடியாது. ஒமைக்ரான், எதிர்காலத்தில் வேறு கொடிய வைரசாக உருமாறலாம் அல்லது உருமாறாமலும் போகலாம்.
ஒரு சிலர் ஒமைக்ரானுடன் கொரோனா தொற்று முடிந்து விடும் என கூறுகின்றனர். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. விரைவில் அது முடிவுக்கு வருவது கடினம். கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. அது உள்ளூர் நோயாக மாறும்.
இந்தியாவை பொறுத்தவரை ஒமைக்ரான் பாதிப்பு கிடுகிடுவென உயரும். ஆனால், தென்ஆப்பிரிக்காவில் நடந்ததை போலவே பெரும்பாலானோருக்கு நோயின் தீவிரம் லேசாக இருக்கும்.
இப்போதைக்கு நமது ஒரே நம்பிக்கை தடுப்பூசி தான். இது ஒமைக்ரான் பரவலை குறைக்க உதவும். தடுப்பூசி போட்டவர்களும், ஏற்கனவே கொரோனா வந்தவர்களும் ஒரு சிலருக்கு மட்டுமே ஒமைக்ரானை பரப்புவார்கள். ஆனால், தடுப்பூசி போடாதவர்கள் 100 சதவீதம் பரப்புவார்கள். அவர்களுக்கு ஆபத்து அதிகம்.
தடுப்பூசி போட்டுவிட்டோமே என பொறுப்பில்லாமல் இருக்க கூடாது. ஒமைக்ரானை கட்டுப்படுத்த தடுப்பூசியை மட்டுமல்லாமல் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலா? 144 கூட போடுங்க.. மத்திய உள்துறை செயலாளர் பரபர கடிதம்
- ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. 60 வயதானவர்களுக்கு பூஸ்டர் டோஸ்.. மோடி வெளியிட்ட 3 முக்கிய அறிவிப்புகள்!
- தடுப்பூசி போட்டே ஆகணும்.. ஒட்டகத்தில் வலம் வரும் பெண் பணியாளர்.. குவியும் வாழ்த்துக்கள்..
- டெல்டா வகையை விட ‘ஒமைக்ரான்’ அதிக பாதிப்பு ஏற்படுத்துமா..? இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் வெளியான ‘புதிய’ தகவல்..!
- இவங்களுக்கெல்லாம் ‘No’ இன்டர்வியூ.. ஒமைக்ரான் பரவலால் ‘H-1B’ விசா வழக்குவதில் தளர்வு.. அமெரிக்கா அதிரடி அறிவிப்பு..!
- வேகமெடுக்கும் ‘ஒமைக்ரான்’ பரவல்.. இரவு நேர ஊரடங்கை அறிவித்த ‘மற்றொரு’ மாநிலம்..!
- அதிகரிக்கும் ஒமைக்ரான்.. ஐபிஎல் 2022 எங்கு நடக்கும்??.. பிளான் பி ரெடி.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
- இன்று முதல் இரவு நேர ஊரடங்கு.. அறிவித்த மாநில அரசு.. நெருங்கும் ஒமைக்ரான்..
- ஒமைக்ரானை விடுங்க அடுத்து 'டெல்மைக்ரான்' வந்திடுச்சு... ஐரோப்பா, அமெரிக்காவுக்குள் நுழைஞ்சாச்சு..!
- ஒமைக்ரானை பத்திவிட... இதெல்லாம் பத்தாது... செய்யவே கூடாத 'அந்த' தவறு!