'முதல் தடுப்பூசி இதுவாதான் இருக்கும்'... 'அதுவும் நவம்பர்லையே'... 'இந்தியர்களுக்கு வெளியாகியுள்ள ஹேப்பி நியூஸ்!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் கிடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்யாவின் பண்ட் சிஇஓ கிரில் டிமித்ரிவ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டியுள்ள நிலையில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அதிதீவிரமாக உள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனமும் பரிசோதித்து வருகிறது.

அதேபோல ரஷ்யாவின் Sputnik-V கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டி லேபாரட்டரீஸுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த Sputnik-V தடுப்பூசி 100 மில்லியன் டோஸ், இந்தியாவில் தயாரிக்கப்படவும் இருக்கிறது. இந்த மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள டாக்டர் ரெட்டி லேபாரட்டரீஸ் நிர்வாக இயக்குநர் ஜிவி பிரசாத் கூறுகையில், "ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் அனுமதி கேட்டிருக்கிறோம். ரஷ்யாதான் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வழங்கும்" எனத் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள ரஷ்யாவின் பண்ட் சிஇஓ கிரில் டிமித்ரிவ், "ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசி இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்து வைரஸ் பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா மிக முக்கிய பங்களிப்பை வழங்கும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்