பிரதமர் மோடிக்கு உயரிய விருது.. ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து உள்ளார்.

ரஷ்யா - இந்தியா இடையேயான  உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக,  ரஷ்யாவின் மிக உயர்ந்த விருதான புனித ஆண்ட்ரு விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்து உள்ளார்.

இதனை டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளது. ‘புனித ஆண்ட்ரூ’ விருது ரஷ்யாவின் மிக உயரிய மற்றும் பழமையான விருதாகும். ரஷ்யாவில் 1698-ம் ஆண்டு, அதாவது 17 -ம் நூற்றாண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 1918- ம் ஆண்டு இந்த விருது வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, மீண்டும் 1998-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

தென் கொரியா, ஐக்கிய நாடுகள், சவுதி அரேபியா, பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து, ரஷ்யாவும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருதை அறிவித்து கவுரவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு இதுவரை 7 சர்வதேச நாட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

NARENDRAMODI, PUTIN, RUSSIA, EMBASSY, STANDREWTHEAPOSTLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்