‘வீட்டை எதிர்த்து கல்யாணம்’.. பாதுகாப்பு கேட்டு கோர்ட்டுக்கு போன ‘காதல் தம்பதி’.. விசாரணையில் எதிர்பாராம நடந்த ‘ட்விஸ்ட்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாதுகாப்பு கேட்டு நீதிமன்றம் சென்ற காதல் தம்பதிக்கு அபராதம் விதித்த சம்பவம் பஞ்சாப்பில் நிகழ்ந்துள்ளது.

Advertising
Advertising

பஞ்சாப்பை சேர்ந்த காதல் தம்பதியினருக்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். மனுவுடன் தங்களது திருமண புகைப்படத்தையும் இணைத்திருந்தனர். இதனை அடுத்து இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது மணமக்களுக்கு எதிர்பார்க்காத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவர்களது திருமண புகைப்படத்தை பார்த்தார். அதில் மணமக்கள், திருமணத்தில் கலந்துகொண்ட நண்பர்கள் என யாருமே முகக்கவசம் அணியவில்லை. இதை கவனித்த நீதிபதி, முகக்கவசம் அணியாத காரணத்திற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதனை 15 நாட்களுக்குள் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என தெரிவித்தார். மக்களுக்கு முகக்கவசம் வாங்கிக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தொகை பயன்படுத்தப்படும்  என குறிப்பிட்டார். மேலும் புதுமண தம்பதிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்