'கண்ண பெருசாக்குனா பயந்துருவோமா?'.. 'நாங்க மட்டும் அங்க வந்தோம்னா'.. பரபரப்பு வீடியோ !
முகப்பு > செய்திகள் > இந்தியாவட்டியில்லாக் கடன்கள் தொடர்பாக ஆந்திர சட்டசபையில், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸூக்கும், எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே எழுந்த விவாதம் சூடுபிடித்த காரணத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வட்டியில்லாக் கடன்கள் தொடர்பான தவறான தகவல்களை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அவையில் பதிவு செய்வதாக தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்ட, இது தொடர்பான உரிமை மீறல் தீர்மானமும் கொடுக்கப்பட்டது. அதே சமயம், ஜெகன் மோகன் ரெட்டி அளித்துள்ள தகவல்கள் தவறானவை என நிரூபித்தால், ஜெகன் பதவி விலக தயாரா? என சந்திரபாபு நாயுடு நேரடியாகக் கேட்டுள்ளார்.
அப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு பதில் கொடுத்த ஜெகன், ‘இதற்கு முன் நீங்கள் பேசும்போது நாங்கள் யாராவது வாய் திறந்தோமா?.. உங்களுக்கான மரியாதையைத் தர வேண்டும் என்பதால் நான் தனியாக நின்று பேசி உங்களை சமாளித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எங்கள் ஆதரவாளர்கள் 150 பேர் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் அங்கு(உங்கள் இடத்திற்கு) வந்தால் நீங்கள் தரையில் கூட அமர முடியாது. என்ன பேசுறீங்க?’ என்று காட்டமாக பேசினார்.
மேலும் பேசிய ஜெகன், ‘நீங்க கண்களைப் பெரிதாக்கி, எங்களைப் பாத்தால் மட்டும் நாங்கள் என்ன பயந்துவிடுவோமா? முதலில் உங்கள் ஆதரவாளர்களை அமரச் சொல்லுங்கள்’ என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குழந்தை பெற்ற 7வது நாளில் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’ பெற்றோர் செய்த அதிர வைக்கும் காரியம்..
- 'ஆதார் கார்டில் ஏன் சாதி பெயர் இல்ல?'... 'மணமகன் செய்த அதிர்ச்சி காரியம்'... 'மணக்கோலத்தில் உறைந்துபோன மணமகள்'!
- ‘நண்பருக்காக காத்திருந்த சிறுமிக்கு நடந்த பயங்கரம்..’ 6 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்..
- 'பேமிலியையும் இன்றுமுதல் பாருங்க'... 'காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி'... 'கலக்கும் அரசு'!
- 'அமெரிக்கா வேணாம்.. ஊர்லயே இருக்கலாம்'.. 'சோகத்தில் ஆழ்த்திய மொத்தக் குடும்பம்'!
- 'போங்க சார்'... 'வரிசையில வாங்க'... அதிர்ச்சியடைந்த 'சந்திரபாபு நாயுடு'... பரபரப்பு சம்பவம்!
- ரேஷன் உணவுப் பொருட்கள் இனி வீட்டுக்கே.. எப்போ இருந்து?.. முதல்வர் அதிரடி!
- 'இது லிஸ்ட்லயே இல்லயே!'.. சாதிக்கு ஒருவர் என 5 துணை முதல்வர்களா? அதிரடி ஆலோசனையில் முதல்வர்!
- 'இனி நோ ஸ்கூல் பேக்'... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!
- விரைவில் தமிழக முதல்வராக வர வேண்டும்.. மு.க.ஸ்டாலினை வாழ்த்திய ஜெகன்!