'திறக்கப்பட்ட திருப்பதி லட்டு செய்யும் ஊழியரின் வீடு'... 'தம்பி, ஓடு அந்த மெஷினை கொண்டு வா'... ஒரு நிமிடம் அதிர்ந்து நின்ற அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருப்பதி தேவஸ்தான ஊழியரின் வீட்டைத் திறந்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிசெய்யும் ஊழியர்களுக்குத் தேவஸ்தானம் சார்பில் வீடுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயார் செய்யும் பணியில் சீனிவாசச்சாரி என்பவர் ஈடுபட்டு வந்தார். அவருக்குத் தேவஸ்தானம் சார்பில் திருப்பதி சேஷாசலம் நகரில் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் இறந்து விட்ட நிலையில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டினை கையகப்படுத்தும் வேலையை அதிகாரிகள் மேற்கொண்டார்கள். இதற்காகத் தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டின் நிலையைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு ஒரு பெட்டி மட்டும் இருந்தது.

அதனைப் பார்த்து சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அதனைத் திறந்து பார்த்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெட்டியின் உள்ளே கட்டுக் கட்டாகப் பணம் இருப்பது தெரிய வந்தது. அளவுக்கு அதிகமாகப் பணம் இருந்ததால் பணம் எண்ணும் இயந்திரத்தைக் கொண்டு வந்து பணத்தை எண்ணினார்கள்.

அதில் சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பது தெரியவந்துள்ளது. எளிமையான வேலை பார்க்கும் சீனிவாசச்சாரிக்கு இந்த பணம் எப்படி வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்