‘பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை..’ போக்சோ சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்  என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை அதிகப்படுத்தும் சட்டத்திருத்த மசோதாவை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஸ்மிருதி இராணி, “குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சிறார்களை வைத்து ஆபாச படங்கள் எடுக்கப்படுவது தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் வகையில் குற்றவாளிக்கு அபராதம் முதல் சிறை தண்டனை வரை வழங்கவும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதன்படி குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படத்தை வைத்திருப்பவர்களுக்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் இது போன்ற ஆபாச படங்களை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துபவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மை ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா ஒப்புதலுக்காக மக்களவைக்கு அனுப்பப்பட உள்ளது.

RAJYASABHA, POCSO, SMRITIIRANI, DEATHPENALTY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்