கொஞ்சம்மா அடிச்சாதான் முறைகேடு... மொத்தம்மா சுருட்டுனா அதுக்கு பேரு வேற... ரூ. 540 கோடிக்கு நாமம் சாத்திய ம.பி.'ஸ்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்தியப் பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 540 கோடியில் கட்டப்பட்டதாக கூறப்பட்ட 4.5 லட்சம் கழிவறைகள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் 540 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டதாக கூறப்பட்டது. அதற்காக புகைப்படங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால் அந்த கழிவறைகள் எங்கு இருக்கின்றன என்று கண்டுபிடிக்க முடியவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் 540 கோடி ரூபாய் கழிவறை திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிராமவாசிகள் சிலர் தங்கள் பெயரில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது தங்களுக்கே தெரியாது என்று பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்வாச் பாரத் திட்டத்தின் மத்தியப் பிரதேச துணை இயக்குநர் அஜித் திவாரி கூறுகையில், பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கழிவறைகள் இல்லாத 62 லட்சத்திற்கும் மேற்பட்ட, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன என்றும், அக்டோபர் 2, 2018 அன்று, இந்த கழிவறைகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.

அதனை உறுதிசெய்ய 21,000 தன்னார்வலர்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 4.5 லட்சம் கழிவறைகளை காணவில்லை எனக் குறிப்பிட்டார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

MADHYA PRADESH, SCHAM, SCANDLE, TOILET, SWACHH BHARAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்