பாலியல் வன்கொடுமை.. சிகிச்சை பலனின்றி 'இளம்பெண்' மரணம்.. ரூபாய் 25 லட்சம், வீடு 'வழங்குவதாக' முதல்வர் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்ததால் 5 பேர் கொண்ட கும்பலால் எரிக்கப்பட்டார். 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்  சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.40 மணிக்கு டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என பொதுமக்கள், அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் வீடும், ரூபாய் 25 லட்சம் பணமும் வழங்கப்படும் என உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

மேலும்,'' இளம்பெண் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்,'' எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அந்த பெண்ணின் தந்தையும், சகோதரரும் வலியுறுத்தி உள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்