ரியல் ஹீரோ... ஒரு நொடிதான் இருந்துச்சு... பயணியின் உயிரை காப்பாற்றிய காவலர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா: ஓடும் ரயிலில் இருந்து ஏற  முயன்றபோது ரயில்வே பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Advertising
>
Advertising

சமீபகாலமாக ரயில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு சிலர் அவசரத்தால் உயிரை இழக்கும் சூழல் நிலவுகிறது. பொறுமை இல்லாததால் ரயில் தண்டவாளங்களுக்கு இறையாகும் உயிர்கள். நகர்ந்து செல்லும் ரயிலில் ஒருவரை முந்தியடித்து ஏற முயன்று ரயிலுக்குள் சிக்கி கால்களை இழக்கும் பரிதாபங்கள் நிகழ்கின்றன.

ரயில் பயணம் உயிரை மாய்க்க கூடியது அல்ல. தண்டவாளத்தில் அல்ல, தரையில் மெதுவாகச் செல்லும் ரயிலில் உங்களைப் பார்த்தால், நீங்கள் ஒரு கனவில் மிதப்பதை தவிர்ப்பது நல்லது. யாருடைய தொந்தரவும் இல்லாமல் நிம்மதியான பயணமாக இருக்க வேண்டுமே தவிற குடும்பத்தினருக்கு துன்பம் தரும் பயணத்தை யாரும் தந்து விடாதீர்கள் என ரயில்வே நிர்வாகம் விழிப்புணர்வு செய்து வருகிறது.

ரயில்வே நிலையங்களில்சிசிடிவி காட்சிகள் உள்ளதால் விபத்துகளை நேரடியாக காணாவிட்டாலும் சோஷியல் மீடியாவில் வைரலாக்கப்படும் வீடியோக்கள் மரண பீதியை ஏற்படுத்துகின்றன. அப்படியிருந்து சிலர் காதில் கூட கேட்பதில்லை அதை மதிப்பதும் இல்லை. ரயிலை பிடிக்கும் வேகத்தில் உயிரை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

அதேபோன்று ஒரு நபர் ரயிலில் ஏற முயன்று நுழிலையில் உயிர் தப்பிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு ஊரடங்கான நேற்று விடுமுறையை கழித்து விட்டு மகராஷ்டிரா மாநிலம் வசாய் ரயில் நிலையத்தில் ஒருவர் மும்பை ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் வசாய் ரயில்வே நிலையத்தில் இருந்து கிளம்பியது. அங்கு ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவர் ரயிலில் ஏற முயன்று தவறி ரயில்வே பிளாட்பாரத்தில் கீழே விழுகிறார்.

கீழே விழுந்தவரை ரயில் சென்றபோது அவரது கால்கள் படிக்கட்டில் மாட்டிக் கொண்டன. வெளியே வர முடியாமல் தவித்தார்.  எதிர்பாராதவிதமாக நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே பறிதவித்த நிலையில் இருந்தார். அப்போது,  அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவரது உயிரை காப்பாற்றினர். தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Stealth omicron : RT-PCR சோதனையிலும் சிக்காத புதிய வகை கொரோனா.. வார்னிங் தரும் நிபுணர்கள்

85 வயசு மைசூரு மாப்பிள்ளைக்கு.. 65 வயசுல கிடைச்ச மணமகள் (மகாராணி).. சில்லு கருப்பட்டி போல் காதல் கதை

RPF SOLDIER SAVES PASSENGER, VASAI RAILWAY STATION, மகாராஷ்டிரா, ரயில் பயணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்