தண்டவாளத்தை கடக்க முயற்சி.. தன்னுயிரை தியாகம் செய்து.. 3 உயிர்களை காப்பாற்றிய காவலர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 பேரின்  உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலர் ஒருவர்,  ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்தவர் ஜக்பிர் சிங் ராணா. 51 வயதான இவர் டெல்லி அருகே உள்ள ஆசாத்பூர் ரயில்நிலையத்தில் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணியளவில், இவர் பணியில் இருந்தபோது, ரயில்வே தண்டவாளத்தில் ஒரு தம்பதியும், கொஞ்சம் தூரத்தில் குழந்தை ஒன்றும் இருப்பதைப் பார்த்துள்ளார். அப்போது, கல்கா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது.

இதைக் கண்ட ராணா அவர்களை நோக்கி கத்தினார். மேலும் அங்கிருந்தவர்களும் அவர்களை நோக்கி கையசைத்துக் கத்தியுள்ளனர். ஆனால்  அந்த தம்பதி தண்டவாளத்திலேயே சண்டையிட்டு கொண்டிருந்தனர். அருகில் குழந்தை ஒன்றும் விளையாடிக் கொண்டிருந்தது. இதனால் அவர்களை நோக்கி வேகமாக ஓடிய ராணா அவர்களை வெளியே தள்ளிவிட்டதுடன், குழந்தையை வெளியே செல் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து குழந்தை அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளது. அவர்களின் உயிரை காவலர் ராணா காப்பாற்றினார்.

ஆனால், அதற்குள் வேகமாக வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ்,  ராணா  சுதாரிப்பதற்குள் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். ரயில்வே போலீஸ் ஒருவர் மூன்று உயிர்களைக் காப்பாற்ற தன் உயிரை இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RPF, CONSTABLE, SAVE, LIFE, DELHI, TRAINTRACK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்