கிராம மக்களுக்கு எங்க சேவை ரொம்ப தேவையா இருக்கு... அதனால தான இப்பவும் நான் வர்றேன்... 9 மாத கர்ப்பிணி செவிலியரின் நெகிழ்ச்சி செயல்
முகப்பு > செய்திகள் > இந்தியா9 மாத கர்ப்பிணியான செவிலியர் ஒருவர் கர்நாடகா அரசு மருத்துவமனையில் தினமும் 6 மணிநேரம் பணியாற்றி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு, தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடகாவில் 862 பேர் பாதிக்கப்பட்டு, அவர்களில் 426 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். 31 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவின் சிவமொக்கா நகரில் கஜனூரு கிராமத்தில் வசித்து வரும் ரூபா பிரவீன் ராவ் என்ற 9 மாத கர்ப்பிணி, அங்குள்ள ஜெய சாமராஜேந்திரா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
நிறைமாதமாக இருந்தும் தினமும் தனது கிராமத்தில் இருந்து தீர்த்தஹள்ளி பகுதிக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுபற்றி ரூபா கூறும்பொழுது, இந்த பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு எங்களுடைய சேவை தேவையாக உள்ளது.
எனது மூத்த பணியாளர்கள் விடுமுறை எடுத்து கொள்ளும்படி என்னிடம் கேட்டு கொண்டனர். ஆனால் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒரு நாளைக்கு 6 மணிநேரம் பணியாற்றி வருகிறேன்.
முதல் அமைச்சர் எடியூரப்பா தொலைபேசி வழியே என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். எனது அர்ப்பணிப்பு உணர்வை அவர் பாராட்டினார். ஓய்வு எடுத்து கொள்ளும்படி எனக்கு அவர் ஆலோசனையும் வழங்கினார்’ என்று கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- லேசான 'கொரோனா' அறிகுறி இருந்தா... வீட்டுல இருந்து இதை 'மட்டும்' செய்ங்க... மறுபடியும் 'பரிசோதனை' தேவையில்லை!
- இந்தியா இல்லன்னா 'இதை'... நெனைச்சு கூட 'பார்க்க' முடியாது... உலக சுகாதார நிறுவனம் 'எச்சரிக்கை'
- அவ்ளோ 'சீக்கிரம்' விடாது போல... 'பிறப்பிடமான' வுஹான் நகரில்... மீண்டும் 'தலைதூக்கிய' கொரோனா!
- 'ஊரடங்கு' நேரத்துல ரூல்ஸை... அதிகம் 'பிரேக்' பண்ணது இவங்க தானாம்... ஷாக் தகவல்!
- இதெல்லாம் எப்ப தான் முடியும்!? வெளியான ஆய்வு முடிவுகள்!.. ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவல்!
- ரயிலில் வந்த தொழிலாளர்கள்!.. தனிமை முகாமுக்கு பயந்து எடுத்த அதிரடி முடிவு... மாநில அரசுக்கு புதிய சிக்கல்!
- 'எல்லாம் உங்க கைல தான் இருக்கு '... 'இத மட்டும் செய்யல, இந்தியாவில் பலருக்கு வேலை பறிபோகும்'... FICCI எச்சரிக்கை!
- தமிழகத்தில் அசுரவதம் செய்யும் கொரோனா!.. இன்று ஒரே நாளில் 6 பேர் பலி!.. 8 ஆயிரத்தைக் கடந்தது தொற்று எண்ணிக்கை!
- செல்வச் செழிப்பில் மிதந்த... கோடீஸ்வர நாட்டுக்கு இப்படியொரு நிலையா!? அதலபாதாளத்தில் விழுந்த பொருளாதாரம்!.. அடிப்படை வரியே 3 மடங்கு உயர்வு!
- 'புருஷன் வருவாருன்னு காத்துக்கிடந்த மனைவி'... 'சவப்பெட்டியில் வந்த கணவன்'... நெஞ்சை ரணமாக்கும் சோகம்!