'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வச்சுருக்கவரா 'இப்படி' பண்ணினாரு...? 'ஸ்பாட்டுக்கு போய் சோதனை நடத்திய அதிகாரி...' - தெரிய வந்த 'அதிர' வைக்கும் உண்மை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகிலேயே மிகவும் மதிப்புமிக்க கார்களாகவும், கார்களின் அரசனாகவும் வர்ணிக்கப்படுபவை ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், 8 கோடி ரூபாய் விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி வழக்கு தொடர்ந்ததற்காக சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.
இந்த சம்பவம் மறப்பதற்குள் ரோல்ஸ் ராய் உரிமையாளர் ஒருவர் மின்சாரம் திருடியதாக சிக்கலில் சிக்கி சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த சிவசேனா கட்சி பிரமுகர் சஞ்சய் கெய்க்வாட். கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் சஞ்சய் கெய்க்வாட் மீது மின்சாரம் திருடியதாக மகாராஷ்டிரா மின் பகிர்மான நிறுவனம் அவர் மீது கடந்த வாரம் கொல்சேவாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
சஞ்சய் கெய்க்வாட்டின் கட்டிட பணி நடைபெறும் பகுதியில் சென்று, மகாராஷ்டிர மின் பகிர்மான நிறுவன கூடுதல் செயற்பொறியாளர் அசோக் புந்தே நடத்திய சோதனையில் அங்கு 34,840 ரூபாய் மதிப்புள்ள மின் திருட்டு நடந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.
மின்சாரம் திருடிய செயலுக்காக சஞ்சய் அவர்களுக்கு 15,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மூன்று மாதங்கள் முடிந்த நிலையிலும் இன்னும் சஞ்சய் கெய்க்வாட் அபராதத் தொகையை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன்காரணமாகவே, அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட காரணத்தினால் சஞ்சய் கெய்க்வாட் நிலுவைத்தொகையும், அபராதத் தொகையையும் சேர்த்து செலுத்தியிருக்கிறார்.
அபராதம் மற்றும் நிலுவை தொகையை செலுத்திய சஞ்சய் கெய்க்வாட், மகாராஷ்டிரா மின்வாரியம் தன் மீது வேண்டுமென்றே பொய் புகார் அளித்திருப்பதாக கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "தமிழகம் முழுவதும் உள்ள மின் அளவீட்டுக் கருவிகளில் 'புதிய' மாற்றம்"!.. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்பு!
- 'மக்களே கவலை வேண்டாம்'... 'மின் கட்டணம் செலுத்த இந்த தேதி வரை கால அவகாசம்'... தமிழக அரசு அறிவிப்பு!
- 'மே மாதத்திற்கு கரண்ட் பில் வரவில்லையா'?... 'கவலை வேண்டாம்'... பொதுமக்களுக்கு மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!
- 'அங்க கேரளால பண்ணியிருக்காங்க பாருங்க...' 'அதேப்போல நம்ம தமிழ்நாட்டுலையும் பண்ணனும்...' 'அப்படி பண்ணா' மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்...! - சீமான் அறிக்கை...!
- 'இப்படி ஒரு கரண்ட் பில் பார்த்தா...' 'யாரா இருந்தாலும் தலை சுத்த தானே செய்யும்...' - ஒரு ஜில்லாக்கு சேர்த்து பில் போட்டாங்கன்னு நெனச்சோம்...!
- செல்போன், கரண்ட் ரெண்டுமே எனக்கு தேவையில்ல...! எதற்காக இப்படி ஒரு முடிவு...? அதிர வைக்கும் காரணம்...!
- '9000 ஊழியர்களை' பணியிலிருந்து நீக்கும் 'நிறுவனம்...' 'பிரபல' பணக்கார 'நிறுவனத்தின் 'ஊழியர்களுக்கே' இந்த நிலை...
- ‘அத்திவரதர் தரிசனத்திற்கு நின்றபோது’... ‘திடீரென மின்சாரம் பாய்ந்ததால்’... ‘பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்’!
- ‘டிக்டோக்’ மோகத்தால்.. ‘ரயில் எஞ்சின் மேல் ஏறிய..’ சிறுவனுக்கு நடந்த பரிதாபம்..
- மின்சாரம் இல்லாமலேயே.. ‘பல்பை எரிய வைக்கும் அதிசய மனிதர்கள்..’