‘பொறுப்பேற்றுக்கொண்ட நடிகை ரோஜா'... ‘ஏபிஐஐசி தலைவராக பதவியேற்பு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடிகையும், ஆந்திர மாநிலம், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான ரோஜா தனக்கு அளிக்கப்பட்ட புதிய பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் நடிகை ரோஜா தனது தொகுதி மட்டுமல்லாமல்,வெற்றிக்காக மற்ற தொகுதியிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகப் பேசப்பட்டது. ஆகையால் நடிகை ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பேச்சுகள் எழுந்தது. ஆனால் ரோஜாவிற்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. இதனால் ரோஜாவின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டு வந்தது.

ரோஜா ஒரு மாதத்திற்கு முன்பு, அமராவதியில் உள்ள ஆந்திர தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்தார்.  இதைத்தொடர்ந்து அவருக்கு ஆந்திர மாநில தொழில்துறை கட்டமைப்பு நிறுவன தலைவராக அவரை, ஜெகன்மோகன் அறிவித்தார். இந்த அறிவிப்புகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதையடுத்து தற்போது கடந்த திங்கள்கிழமையன்று, மங்களகிரியில் உள்ள ஆந்திர மாநில தொழிற்துறை முதலீட்டுக் கழக அலுவலகத்தில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அங்கு அதிகாரிகளிடையே பேசிய ரோஜா, ‘ஆந்திராவில் தொழில் துறை அபிவிருத்தி ஏற்படவேண்டும் என்பதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உறுதியாக இருக்கிறார். முதலீட்டாளர்கள் ஆந்திராவில் தொழில் தொடங்க முன்வரவேண்டும். ஆந்திராவில் தொழில் துவங்குபவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்கள் தொழில் துவங்க தேவையான நிலம் வழங்கப்படும். உள்ளூரை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு, தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும். எனக்கு வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி’ எனக் கூறினார்.

ACTRESSROJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்