கொரோனாவால் இறந்தவர் மூலம் நோய் தொற்று ஏற்படுமா..? ஓராண்டு நடந்த ஆய்வு.. எம்ய்ஸ் புதிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலில் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவுவது தொடர்பாக எம்ய்ஸ் ஆய்வு நடத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த ஒருவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதா என்பது தொடர்பாக இதுவரை எந்த ஆதாரபூர்வமான தகவலும் இல்லை என்ற நிலை நிலவி வந்தது. இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டது.
இதுகுறித்து தெரிவித்த டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத்தலைவர் டாக்டர் சுதீர் குப்தா, ‘கடந்த ஒரு ஆண்டாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை சார்பில், கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தி வந்தோம். கிட்டத்தட்ட 100 உடல்களை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை மறு ஆய்வு செய்தோம். உயிர் பிரிந்த 12 முதல் 24 மணி நேரத்தில் இந்த பரிசோதனையை மேற்கொண்டோம்.
இறந்து 24 மணிநேரத்திற்கு பின்னர் ஒருவரது உடலில் குறிப்பாக மூக்கு மற்றும் வாய் குழிகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அதனால் ஒருவர் இறந்து 12 முதல் 24 மணி நேரமான பின்னர், அவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை.
கொரோனாவால் ஒருவர் இறந்த பின்னர். உடல் திரவங்கள் மற்றும் பிற கசிவுகளைத் தடுக்கிற பாதுகாப்பு நோக்கங்களுக்காக மூக்கு, வாய் குழிகள் மூடப்பட்டு விடவேண்டும். இப்படி கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களைக் கையாள்கிறவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு கவச உடைகள், முக கவசம், கையுறைகள் போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும்’ என டாக்டர் சுதீர் குப்தா தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு, இறந்தவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகதான் நடத்தியாக எம்ய்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு Martin Group உதவி!
- தலைசுற்ற வைக்கும் காய்கறி விலை!.. ஒரே இரவில்... ராக்கெட் வேகத்தில் உயர்வு!.. எப்படி நடந்தது?
- 'இந்த நேரத்துல இப்படி செய்யலாமா'?... 'தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் நடந்த குளறுபடி'... தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!
- 'இதுவும் போச்சா'?.. 'டி20 உலகக் கோப்பை நடத்தலாமா? வேண்டாமா'?.. ஐசிசி அவசர மீட்டிங்!.. கடும் விரக்தியில் பிசிசிஐ!
- 'காத்திருந்த சந்தோசமான செய்தி'... 'ஆனா இந்த நிலைமை எந்த குடும்பத்துக்கும் வர கூடாது'... 'ஒரு பக்கம் கணவன், மறுபக்கம் மனைவி'... நெஞ்சை நொறுக்கும் சம்பவம்!
- 'தமிழகத்தில் முழு ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பா'?... 'மருத்துவ நிபுணர் குழுவுடன் நடைபெறவுள்ள ஆலோசனை'... முக்கிய முடிவுகள் வெளியாகும் என தகவல்!
- 'தயவுசெஞ்சு இத கண்டிப்பா செய்யுங்க'... 'இல்ல 3-வது அலை தாக்கும்'... இந்தியாவுக்கு விஞ்ஞானி எச்சரிக்கை!
- கருப்பு பூஞ்சை தொற்றுக்கான அறிகுறிகள் என்ன?.. யாரை எளிதாக தாக்கும்..? எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்..!
- வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் வழங்கப்பட்டது!
- VIDEO: கொரோனா இருக்கா? இல்லையா?.. ‘வீட்டில் இருந்தே கண்டறியும் கருவி’.. ஐசிஎம்ஆர் அனுமதி..!