8 வயசுலயே ஜனாதிபதியிடம் விருது.. இந்தியாவின் இளம் ஜீனியஸ்.. யாருப்பா இந்த ரிஷி ஷிவ் பிரசன்னா.?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் மிக இளம் வயது ஜீனியஸ் என்று கருதப்படும் ரிஷி ஷிவ் பிரசன்னாவிற்கு நேற்று இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது அளித்து கவுரவப்படுத்தியுள்ளார்.

Advertising
>
Advertising

                                  Images are subject to © copyright to their respective owners.

Also Read | சதம் அடிச்சிட்டு கொண்டாடிய ரோஹித்.. சூரிய குமார் யாதவ் கொடுத்த சிக்னல்.. வைரலாகும் வீடியோ..!

இந்தியாவின் பெங்களூருவை சேர்ந்தவர் ரிஷி ஷிவ் பிரசன்னா. தற்போது அவருக்கு 8 வயதாகும் நிலையில் இதுவரையில் 3 ஆண்டராய்டு அப்ளிகேஷன்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார் ரிஷி. இரண்டு வயதிலேயே வாசிக்க கற்றுக்கொண்ட ரிஷி, மற்ற குழந்தைகள் எழுத்துக்களை கற்றுக்கொள்ளும்போதே புத்தகங்களை வாசிக்க துவங்கி இருக்கிறார். சொல்லப்போனால் தன்னுடைய 5 வயதிலேயே ஹாரி பாட்டர் நூலை வாசித்து முடித்திருக்கிறார் ரிஷி.

இவருக்கு IQ பரிசோதனை நடத்தப்பட்டபோது இவருடைய மதிப்பெண் 180 ஆகும். உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் IQ 160 என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் அறிவுசார் சமூகம் என்று கருதப்படும் மென்சாவில் உறுப்பினர் ஆனார். அப்போது இவருடைய வயது 4 வருடம் மற்றும் 5 மாதங்கள் ஆகும்.

Image Credit: PTI

5 வயது முதல் கோடிங் கற்றுக்கொண்ட இவர் “IQ Test App” எனும் அப்ளிகேஷன்களை குழந்தைகளுக்காக டிசைன் செய்திருந்தார். அதன்பிறகு “Countries of the world” என்ற அப்ளிகேஷனை அவர் வெளியிட்டார். இதனை தொடர்ந்து தன்னுடைய 6 வயதில் கொரோனா காலத்தில் பெங்களூருவை சேர்ந்த மக்களுக்கு உதவ “CHB” என்ற அப்ளிகேஷனையும் அவர் கண்டுபிடித்திருந்தார்.

எதிர்காலத்தில் விஞ்ஞானியாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என தெரிவித்திருக்கும் ரிஷி புத்தகங்களை வாசிப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார். மேலும், புத்தகம் வாசிப்பதே அறிவுசார்ந்த நபராக மாற வழிவகுக்கும் என தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், அவருக்கு இந்தியாவின் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு 'பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' விருதினை அளித்திருக்கிறார்.

Image Credit: PTI

இளம் வயதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நபர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டு வருகிறது, அதன்படி இம்முறை 11 பேருக்கு குடியரசு தலைவர் விருது அளித்து கவுரவப்படுத்தியிருந்தார். அதில் ரிஷியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இப்படியா பண்றது?".. இஷான் கிஷன் செயலால் அப்செட் ஆன கோலி?.. மேட்ச் நடுவே பரபரப்பு சம்பவம்.. வீடியோ

RISHI SHIV PRASANNA, PRADHAN MANTRI RASHTRIYA BAL PURASKAR, IQ TEST APP

மற்ற செய்திகள்