ஊழல கண்டுபிடிச்சதுக்காக.. 7 முறை சுடப்பட்ட அரசு ஊழியர்.. சோதனை'ய தாண்டி வேற லெவல் சம்பவம் செய்த நபர்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊழலைக் கண்டுபிடித்ததன் பெயரில், அரசு அதிகாரி ஒருவருக்கு நேர்ந்த சம்பவமும், அதன் பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து, அவர் சாதித்த விஷயத்தியும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Advertising
>
Advertising

உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2007 Batch, அரசு ஊழியராக (PCS) இருந்தவர் ரிங்கு சிங் ரஹீ. இவர், முசாஃபர் நகரில், தன்னுடைய பணிக்காலத்தில் போது, உதவித் தொகை பெயரில் நடைபெற்ற ஊழல் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

மொத்தம், 83 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக தகவலை வெளிப்படுத்தி இருந்தார் ரிங்கு சிங். இதனால், சில அதிகாரிகள் அவர் மீது கடும் கோபத்தில் இருந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் ரிங்கு சிங்கை துப்பாக்கி மூலம் சிலர் சுட்டுள்ளனர்.

உடம்பில் பாய்ந்த புல்லட்கள்

இந்த தாக்குதலில், மொத்தமாக 7 புல்லட் அவரது உடம்பில் பாய்ந்தாலும், உயிர் தப்பி இருந்தார் ரிங்கு சிங். மேலும், 3 புல்லட்டுகள், அவர் முகத்தில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. அதே போல, ஒரு கண்ணின் பார்வையை இழந்த ரிங்கு சிங்கிற்கு, காதின் கேட்கும் திறனும் குறைந்து போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அறிவுறுத்திய மாணவர்கள்

இதுகுறித்து பேசிய ரிங்கு சிங், "மிகவும் சோதனை நிறைந்த காலகட்டம் அது. சிஸ்டத்துக்கு எதிராக நான் போராடவில்லை. சிஸ்டம் தான் எனக்கு எதிராக போராடி இருந்தது. 4 மாதங்கள் நான் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றேன்" என கூறினார். தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு மீண்டு வந்த ரிங்கு சிங், யூபிஎஸ்சி தேர்வர்களுக்கு பயிற்சி கொடுக்கும் நிறுவனத்தில் இணைந்து, பயிற்சி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

தொடர்ந்து, பல மாணவர்களை யூபிஎஸ்சி தேர்வுக்கு ரிங்கு சிங் தயார் செய்து வந்த நிலையில், நீங்களே யூபிஎஸ்சி தேர்வுக்கு தயார் செய்யலாமே என மாணவர்கள் அவரை அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், 40 வயதான ரிங்கு சிங்கிற்கு யூபிஎஸ்சி தேர்வு எழுத சில தளர்வுகள் இருந்துள்ளது. இதனை பயன்படுத்தி, கடினமாக தேர்வுக்கு உழைத்த ரிங்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வில், அகில இந்திய அளவில், 683 ஆவது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

நேர்மையான அரசு ஊழியராக இருந்ததன் பெயரில், பல கஷ்டங்களை அனுபவித்து, அதிலிருந்து மீண்டு வந்து, யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ரிங்கு சிங் சஹீயை பலரும் பாராட்டி வருகின்றனர்.

RINKU SINGH RAHI, UPSC, UPSC EXAMS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்