'அக்கா 8 அடி பாஞ்சா'... 'தங்கச்சி 16 அடி பாஞ்சிட்டாங்க'... சகோதரிகளை கொண்டாடும் ஒட்டுமொத்த தேசம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

யூபிஎஸ்சி தேர்வில் சாதித்து ஒட்டு மொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்கள் சகோதரிகள்.

இந்தியக் குடிமைப் பணி தேர்வில் கடந்த 2015 ஆம் ஆண்டு டீனா டாபி என்ற இளம்பெண் வெற்றி பெற்று அசத்தினார். அதிலும் தனது முதல் முயற்சியிலேயே இந்த வெற்றியை அவர் பெற்றார். அதுமட்டுமல்லாமல் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்ற முதல் பட்டியலினப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். தற்போது அவரது சகோதரி ரியா டாபியும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் ரியா டாபி அகில இந்திய அளவில் 15வது இடம் பெற்றுள்ளார். தேர்வு முடிவில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் ஐவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரியா டாபி, , "நான் இப்போது மகிழ்ச்சி, நன்றியுணர்வு எனப் பல உணர்வுகளால் சூழப்பட்டுள்ளேன்.

எனது பெற்றோரும், சகோதரியும் தான் எனக்கு மிகப்பெரிய ஆதரவு. அவர்கள் இல்லாமல் இது நடந்திருக்காது. எனது தயார் எனக்குப் பெரிய ரோல் மாடலாக இருந்துள்ளார். எனது சகோதரியோடு இந்திய ஆட்சி பணியில் இணைவது என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்