ஈ.சி.ஜி, 'ரெம்டெசிவிர்'.... கொரோனா சிகிக்சைக்கான... 'புதிய' நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகளவில் கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே சோதனை அடிப்படையில் மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். பிளாஸ்மா சிகிச்சை, ரெம்டெசிவிர் மருந்துகள் ஆகியவை கொரோனா சிகிச்சையில் முக்கியமாக கருதப்படுகின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திருத்தப்பட்ட நெறிமுறைகளை மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப நிலையில், அர்த்தமுள்ள பலன்களை அடைவதற்கு கொடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுக்கக்கூடாது
(இதற்கு முன்பு கொரோனா தீவிரமாக பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அஜித்ரோமைசின் மாத்திரைகளுடன் சேர்த்து தரலாம் என்று கூறி இருந்த நெறிமுறையை இப்போது மத்திய சுகாதார அமைச்சகம் திரும்பப்பெற்றுள்ளது,)
*ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பொறுத்தவரையில், கொரோனா வைரசுக்கு எதிராக ‘இன்விட்ரோ’ செயல்பாட்டை நிரூபித்துக்காட்டி உள்ளது. பல சிறிய அளவிலான ஒற்றை மைய ஆய்வுகளில் இது பயன் அளிப்பதாக காட்டப்பட்டுள்ளது.
*ஆனாலும்கூட, கடுமையான வரம்புகளை கொண்ட பல பெரிய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பெரிய அளவுக்கு பலன் தரக்கூடிய முடிவுகள் கிடைக்கவில்லை. குறிப்பாக மரணத்தை தடுப்பதில், அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்துவதில் சாதகமான முடிவு கிடைக்கவில்லை. எனவே, அதன் பயன்பாட்டுக்கு பின்னால் உள்ள ஆதாரங்கள், மற்ற மருந்துகளைப்போல மட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன.
*இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட நோயாளிகளிடம் கலந்து பேசி முடிவு எடுத்துதான் வழங்க வேண்டும். பிற வைரஸ் தடுப்பு மருந்துகளைப்போலவே இந்த மருந்தைகயும் நோயின் போக்கில் ஆரம்பத்தில் பயன்படுத்த வேண்டும். இதனால் அர்த்தமுள்ள பலன் கிடைக்கலாம்.
*ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பரிந்துரைப்பதற்கு முன்பாக நோயாளிக்கு இ.சி.ஜி. பரிசோதனை ஒன்றை செய்து பார்த்து விடுவது நல்லது.
* அவசர கால பயன்பாட்டுக்கு வைரஸ் தடுப்பு மருந்தான ‘ரெம்டெசிவிர்’ பரிந்துரைக்கலாம்.
* கொரோனா தீவிரம் மிதமாக இருக்கிற நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 105 பேருக்குமே 'நெகட்டிவ்'... அப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு... 'நம்பிக்கை' தரும் மாவட்டம்!
- “வெண்டிலேட்டரே தேவையில்ல.. 2 மாசத்துக்குள்ள உலகெங்கும் கிடைக்கும்!”.. 'கொரோனாவை' எதிர்கொள்ள 'புதிய மருந்து'!.. 'ஆஸ்திரேலிய' அறிஞர்கள் 'சாதனை'!
- "புதிய வகை வைரஸ் பரவுகிறதா?..." சீனாவில் ‘போர்க்கால எமர்ஜென்சி’ அமல்... 'கோவிட்-19' அறிகுறிகள் 'தென்படாததால் அதிர்ச்சி...'
- 'கொரோனாவை விரட்டும் மூலிகை டீ...' 'இந்த மாவட்டத்துல நெறைய பேர் குணம் ஆயிட்டு வராங்க...' ஆங்கில மருத்துவ சிகிச்சையோடு மூலிகை டீ குடிக்கிறப்போ நல்ல பலன்...!
- பிரபல 'கிரிக்கெட்' வீரருக்கு 'கொரோனா...' 'எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்...' 'ட்விட்டர்' பதிவில் 'உருக்கம்...'
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...'
- 'இந்த அறிகுறி இருந்தால் கொரோனா இருக்கலாம்'... 'மக்களே ரொம்ப கவனம்'... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
- இந்த 'மருந்தை' பெரிதாக நம்பினோம்... HCQ போன்று சர்ச்சையை கிளப்பும் மற்றொரு மருந்து... 'எய்ம்ஸ்' இயக்குனரின் 'புதிய விளக்கம்...'
- 'கொரோனா கொஞ்சம் ஓரமா போய் விளையாடு'... 'இந்தியாவுக்கே மாஸ் காட்டிய 97 வயது சென்னை தாத்தா'... சிலிர்க்க வைக்கும் சம்பவம்!
- 'உன்னோட உயிரை பத்தி நெனச்சு கூட பாக்கலையே மா'... 'அசந்து போக வைத்த கேரள மாணவி'... நெகிழ வைக்கும் சம்பவம்!