ஆச்சர்யமா இருக்கே.. அருவியில் இருந்து மேலே செல்லும் தண்ணீர்..ஓஹோ இதான் காரணமா?.. IFS அதிகாரி பகிர்ந்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் அருவி ஒன்றில் நீர் மேல்நோக்கி செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "இடி இடிக்கிற மாதிரி சத்தம் கேட்டுச்சு.. அப்போதான் வானத்துல அதை பார்த்தோம்.." அதிகாலையில் நடந்த சம்பவத்தால் அலறிய பொதுமக்கள்..!

தென்மேற்கு பருவமழை

ஜூன் முதல் செப்டம்பர் ஆகிய மாதங்களில் வட மற்றும் மத்திய இந்தியாவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இதனை ஈடுகட்ட இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து காற்றுவீசும். அப்போது, நீர்த்துளிகளை கொண்டுள்ள காற்று மலைகளின் மீது மோதி குளிர்வடைந்து மழையாகப் பெய்யும். கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகள், கொங்கன் கடற்கரை ஆகிய இடங்களில் இந்த பருவகாலத்தில் அதிக மழைப்பொழிவு பதிவாகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அரபிக் கடலோர மாநிலங்கள், மத்திய மற்றும் வட கிழக்கு இந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலங்களில் உள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

வைரல் வீடியோ

தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் அருவியில் இருந்து நீரானது கீழே விழுவதற்கு பதிலாக மேல்நோக்கி செல்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் காற்றில் நீர்த் துளிகள் நிரம்பி வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ முன்பே சமூக வலை தளங்களில் பரவிய நிலையில் IFS அதிகாரியான சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்துள்ளார்.

காற்று

இந்த வீடியோவை பகிர்ந்து அதில்,"புவி ஈர்ப்பு விசைக்கு நிகரான காற்று அதிவேகத்துடன் மேல்நோக்கி வீசும்போது இதுபோன்ற நிகழ்வு நடைபெறுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் நானேகாட்டில் இந்த அருமையான காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. பருவமழையின் அழகு இதுதான்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, ஷூ-க்குள் சிக்கிக்கொண்ட நாகப் பாம்பை வனத்துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் வெளியே எடுக்கும் வீடியோவை நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவும் வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | ஜெயிக்கணும்னு வெறி இருந்தா போதும்.. 94 வயசுல உலக தடகள போட்டியில் சாதனை புரிந்த பாட்டி.. கொண்டாடித்தீர்க்கும் பிரபலங்கள்..!

 

REVERSE FLOW OF WATERFALL, MAHARASHTRA, MAHARASHTRA NANEGHAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்