குட்டியின் மரணம்... பழிக்குப் பழி வாங்கும் குரங்குகள் கூட்டம்!- ஒரே ஊரில் சுமார் 250 நாய்க்குட்டிகள் பலி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குட்டி குரங்கின் மரணத்துக்காக குரங்குகள் கூட்டம் நாய்களை வெறித்தனமாக பழிக்குப் பழி வாங்கி வருகின்றன. இதுவரையில் ஒரே ஊரில் குரங்குகளின் பழி வாங்கும் வேட்டையால் சுமார் 250 நாய்க்குட்டிகள் உயிரிழந்துள்ளன.

Advertising
>
Advertising

மஹாராஷ்டிரா மாநிலம் பீட் மாவ்ட்டத்தில் இந்த குரங்குகளின் பழி வாங்கும் வேட்டை மக்களை கடுமையான அச்சத்துக்கு உள்ளாக்கி உள்ளது. சில நாய்கள் கூட்டமாக சேர்ந்து குரங்கு குட்டி ஒன்றை கொன்றுள்ளன. இதன் காரணமாக குட்டியின் மரணத்துக்குப் பழிக்குப் பழி வாங்க நாய்க் குட்டிகளாகத் தேடி கொன்று வருகின்றன குரங்குகள் கூட்டம் ஒன்று.

பீட் மாவட்டத்தில் உள்ள லவூல் என்னும் கிராமத்தில் சுமார் 5,000 மக்கள் தொகை உள்ளது. இந்த ஊரில் தற்போது ஒரு நாய் கூட கிடையாது. தற்போது குரங்குகளின் பழி வாங்கும் வேட்டை மஜல்கோன் கிராமத்தில் நடந்து வருகிறது. திடீரென வரும் குரங்குகள் ஊருக்குள் கண்ணில் சிக்கும் நாய்க்குட்டிகளை கவ்விக் கொள்கின்றன. இந்தக் கூட்டத்தில் உள்ள அனைத்து குரங்குகளும் ஒரே மாதிரியாகவே நாய்க்குட்டிகளை கொல்கின்றன.

நாய்க்குட்டி ஒன்றை பிடித்ததும் அதே உயரத்துக்கு கொண்டு செல்கின்றன. உயரமான ஒரு இடத்தில் இருந்து கீழே போட்டு கொலை செய்கின்றன. இதுகுறித்து அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வனத்துறையினரிடம் புகார் செய்துள்ளனர். வனத்துறையினரும் தீவிரமாக பணியாற்றினாலும் இந்தக் குரங்குகள் கூட்டத்தை இதுவரையில் பிடிக்க முடியவில்லை.

மக்கள் சிலர் தங்கள் வீட்டு நாய்க்குட்டிகளை காப்பாற்ற நினைத்து படுகாயம் அடைந்து வருகின்றனர். குரங்குகள் கூட்டம் நாய்க்குட்டிகளைத் தாக்க வந்தால் உடனே நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு உயரமான இடங்களுக்குச் செல்கின்றன. பின் தொடர்ந்து செல்லும் நாயின் உரிமையாளர்கள் உயரமான கட்டடங்களில் இருந்து கீழே விழுந்து தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குரங்குகள் கூட்டத்தில் பழி வாங்கும் நடவடிக்கை ஆச்சர்யமாகவும் வேடிக்கையாகவும் இருக்கலாம். ஆனால், குரங்குகளின் பழிக்குப் பழி வேட்டையால் அப்பகுதியினர் மிகுந்த பயத்தில் உள்ளனர். இது எப்போது முடியும் எனத் தெரியாமல் வனத்துறையினரும் தவித்து வருகின்றனராம்.

MURDER, பழிவாங்கும் குரங்குகள், நாய்கள் பலி, REFENGEFUL MONKEYS, DOG PUPS KILLED, MAHARASHTRA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்