வாட்ஸ் அப்பில் வந்த லிங்க்.. "அத க்ளிக் பண்ண கொஞ்ச நேரத்துல".. வங்கி கணக்கு பத்தி வந்த மெசேஜ்.. அதிர்ந்து போன பெண்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெரியாத நம்பரில் இருந்த வாட்ஸ் அப்பிற்கு மெசேஜ் ஒன்று வந்த நிலையில், அதில் வந்த லிங்க்கை க்ளிக் செய்த பெண்ணுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

Advertising
>
Advertising

Also Read | "இத மட்டும் கோலி பண்ணிட்டா.. எல்லார் வாயையும் மூடிடலாம்".. ரவி சாஸ்திரி சொன்ன பரபரப்பு கருத்து!!

ஆந்திர மாநிலம், அன்னமையா என்னும் மாவட்டத்தை சேர்ந்தவர் வரலட்சுமி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இது தொடர்பாக வரலட்சுமி அளித்துள்ள புகாரில் உள்ள தகவலின் படி, சமீபத்தில் அவருக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் ஒன்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்பின் தெரியாத நம்பரில் இருந்து லிங்க் வந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதிலிருந்த மெசேஜை வரலட்சுமி ஓப்பன் செய்தது மட்டுமிலாமல், அதில் இருந்த லிங்க் ஒன்றையும் அவர் க்ளிக் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வரலட்சுமியின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. இதனைக் கண்டு அவர் அதிர்ந்து போகவே, சைபர் க்ரைம் மோசடி நடப்பதை உணர்ந்து கொண்டார். உடனடியாக, இது பற்றி போலீசாருக்கு புகாரளித்துள்ளார்.

மொத்தமாக, 21 லட்ச ரூபாய், வரலட்சுமியின் வங்கி கணக்கில் இருந்து சைபர் மோசடி கும்பல் திருடி உள்ளது. முன்னதாக, முதலில் 20 ஆயிரமும், பின்னர் 40 ஆயிரம் மற்றும் 80 ஆயிரம் என எடுத்த மோசடி கும்பல், தொடர்ந்து பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து 21 லட்ச ரூபாயை திருடி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக, வங்கியில் வரலட்சுமி விசாரித்த போதும், அவரது வங்கி கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக ஊழியர்கள் கூறி உள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் தெரிவித்துள்ள தகவலின் படி, வரலட்சுமி அந்த லிங்க்கை பல முறை க்ளிக் செய்ததன் காரணமாக தான், அவரது வங்கி கணக்கும் ஹேக் செய்யப்பட்டு, பணத்தினை மோசடி கும்பல் தொடர்ந்து எடுத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். அதே போல, லிங்க்கை க்ளிக் செய்ததன் காரணமாக, வரலட்சுமியின் மொபைல் போன் கூட ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

வாட்ஸ் அப்பில் வந்த லிங்க்கை க்ளிக் செய்ததன் காரணமாக, பெண்ணின் வங்கி கணக்கில் இருந்த 21 லட்ச ரூபாய் பணம் திருடு போயுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், முன்பின் தெரியாத நபரிடம் இருந்து வரும் மெசேஜ் லிங்க்குகளை தவிர்க்க வேண்டும் வேண்டும் என்றும் மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Also Read | ஆபரேஷன் முடிஞ்சதும் கெடச்ச கண் பார்வை.. "முதல் முறையா காதலன பாத்ததும்".. இளம்பெண் சொன்ன விஷயம்

WHATSAPP, RETIRED TEACHER, WHATSAPP MESSAGE, UNKNOWN NUMBER, BANK ACCOUNT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்