CARRY BAG-ற்கு தனியா காசு கொடுக்கணுமா?.. கோர்ட்டுக்கு போன நபர்.. நீதிபதி வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலத்தில் கேரி பேக்கிற்கு கூடுதலாக பணம் கேட்ட கடை உரிமையாளர் மீது நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார் ஒருவர். இதில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

விசாகப்பட்டினத்தை சேர்ந்த சீபனா ராமாராவ் என்பவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் அருகிலுள்ள துணிக் கடைக்கு சென்றிருக்கிறார். அங்கே ரூபாய் 600 மதிப்பிலான உடைகளை வாங்கியுள்ளார் ராவ். அப்போது அந்த கடையின் மேலாளர் கேரி பேக்கிற்கு தனியாக 12 ரூபாய் கொடுக்கும்படி ராவிடம் கேட்டுள்ளார்.

விவாதம்

கேரி பேக்கிற்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்பட கூடாது எனவும், நிறுவனத்தின் லோகோ அச்சகடிக்கப்பட்ட கேரி பேக்குகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டப்படி குற்றம் எனவும் ராவ் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்த கடையின் மேலாளர் கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே கேரிபேக் தரப்படும் என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

நுகர்வோர் நீதிமன்றம்

இந்நிலையில் இந்த சம்பவம் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் ராமாராவ். விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் கமிஷன் இந்த வழக்கை விசாரித்தது. இதில் கேரிபேக்கிற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்த கடைக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட செலவுகளுக்காக 1500 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அந்த கடை உரிமையாளருக்கு நுகர்வோர் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கேரி பேக்கிற்காக ராவிடம் பெற்ற பணத்தை அவரிடமே திரும்பக் கொடுக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது நுகர்வோர் அமைப்பு.

நிறுவனங்கள் தங்களுடைய லோகோவை பதித்த கேரி பேக்கிற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஹைதராபாத் நீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கேரி பேக்கிற்கு தனியாக காசு கேட்ட கடை உரிமையாளருக்கு நுகர்வோர் நீதிமன்றம் 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது பலரையும் திகைப்படைய வைத்திருக்கிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

CARRYBAG, CONSUMERCOURT, ANDHRAPRADESH, கேரிபேக், நுகர்வோர்நீதிமன்றம், ஆந்திரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்