'லேட் நைட்ல திடீர்னு எழுப்பி.. நகையெல்லாம் போட்டு டான்ஸ் ஆடச்சொல்லி.. வீடியோ எடுத்து..!'.. மீட்கப்பட்ட சிறுமி பகீர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநித்யானந்தாவின் ஆசிரமத்தில் தனது 4 குழந்தைகள் சிக்கிக் கொண்டதாகவும், அவர்களுள் தனது 15 வயது மகளையும், 13வயது மகனையும் மீட்டுவிட்டதாகவும், மீதமுள்ள நந்திதா(19) மற்றும் லோபமுத்ரா(21) ஆகிய மகள்களை நித்தி கடத்திச் சென்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டி, குஜராத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார் நித்யானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தனன் ஷர்மா.
இந்நிலையில் இவரும் இவரது 15 வயது மகளும் நித்யானந்தா பற்றி அளித்துள்ள குற்றச்சாட்டுகள் பரவிக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை அடைத்துவைத்து சித்ரவதை செய்வது மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பாலியல் தொல்லை தந்துள்ளதாகவும், அவரால் ஏராளமான வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், சர்மாவின் 15 வயது மகள் கூறும்போது, இரவு நேரத்தில் திடீரென பெண் பிள்ளைகளை எழுப்பி, நகைகளை அணியச் சொல்லி , அவரை போற்றிப் பாடி ஆடச் சொல்லி வீடியோ எடுத்துக்கொள்ளச் சொல்வார்கள் என்றும், அதெல்லாம் நித்யானந்தாவின் கட்டளையின் பேராலேயே நடந்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நித்யானந்தா, பெரிய ஆன்மீக செயல்களை நிறைவேற்றும் விதமாக, தான் இமயமலையில் இருப்பதாகவும், ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தான் எவ்வித தொல்லையும் அளிக்கவில்லை என்றும் அவர்களை அவர்களின் பெற்றோர் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்