இந்த 'மருந்தை' பெரிதாக நம்பினோம்... HCQ போன்று சர்ச்சையை கிளப்பும் மற்றொரு மருந்து... 'எய்ம்ஸ்' இயக்குனரின் 'புதிய விளக்கம்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து நோயாளிகளின் சிகிச்சை காலத்தை குறைக்க மட்டுமே செய்கிறது, ஆனால் இறப்பை தடுப்பதில் எந்த நன்மையும் செய்யவில்லை என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தாக பயன்படத்தப்படும் ரெம்டெசிவிர், மருத்துவமனையில் நோயாளிகள் தங்கும் காலத்தை குறைக்க உதவுகிறது. ஆனால் இறப்புகளை தடுப்பதில் நன்மை பயக்கவில்லை. எனவே இந்த மருந்துகள் பயனுள்ளதாக இல்லையா என்பதை குறிப்பிட எங்களுக்கு கூடுதல் தரவு தேவை" எனக் குறிப்பிட்டள்ளார்.
மேலும், "தற்போது பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) உள்ளது. அது குறித்தும் சர்ச்சை உள்ளது. ஆனால் நோயின் ஆரம்ப காலத்தில் இந்த மருந்து சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
அவசரகால பயன்பாட்டுக்கு மட்டும் ரெம்ட்சிவிர் பயன்படுத்தப்படுகிறது. அந்த மருந்துகளும் மிகக் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர்த்து பிளாஸ்மா சிகிச்சை, ஆராய்ச்சியிலும், சந்தையிலும் கிடைக்கக் கூடிய வைரஸ் எதிர்ப்பு தன்மை கொண்ட மறுஉருவாக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்த ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது உள்ள உயிர்காக்கும் சிகிச்சையாக ஆக்சிஜேனற்றம் முறை சிறப்பான பயனளிப்பதாக கூறப்படுகிறது. 90 முதல் 95% நோயாளிகள் இதன் மூலம் குணமடைந்து நலமுடன் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அதிபர்' மனைவிக்கு 'கொரோனா!'.. 'நாட்டிலேயே' கொரோனாவால் பாதிக்கப்பட்ட 'முதல்' பெண்ணும் 'இவர்தான்'!
- கொரோனாவில் இருந்து 'மீண்டவருக்கு' ஆம்புலன்ஸ் மறுப்பு... 8 மணி நேரம் 'ஆட்டோ' ஓட்டி வீட்டில் சேர்த்த பெண்... நேரில் 'வெகுமதி' வழங்கிய முதல்வர்!
- "ஆத்தி... சைலண்டா எவ்ளோ வேல பாத்திருக்காங்க!".. அதிர்ந்து போன ட்விட்டர்!.. 1 லட்சத்து 70 ஆயிரம் கணக்குகள் நீக்கம்!.. என்ன சொல்லப்போகிறது சீனா?
- "சென்னை தொடர்பான இ-பாஸ் நிறுத்தப்படுகிறதா?".. தமிழக அரசு விளக்கம்! உள்தமிழகத்துக்கு படையெடுக்கும் சென்னைவாசிகள்.. திருப்பி அனுப்பும் போலீஸார்!
- "மிருகத்த விட கேவலாக நடத்துறீங்களே!".. கொரோனா நோயாளிகள் நிலை குறித்து... தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை... கிழித்து எடுத்த உச்ச நீதிமன்றம்!
- மதுரையில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா!.. நெல்லை, தூத்துக்குடியிலும் தலைதூக்குகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1,342 பேர் கொரோனாவை வென்றுள்ளனர்!.. முழு விவரம் உள்ளே
- 'உலகம்' முழுவதும் 'ஆண்கள்' தான் 'அதிகம்...' 'இந்தியாவில்' மட்டும் 'பெண்கள்தான்' அதிகமாம்... 'ஏன் அப்படி?...'
- ஒட்டுமொத்த இந்தியாவிலும்... 'இந்த' 69 மாவட்டங்களில் தான்... கொரோனா 'இறப்பு' விகிதம் அதிகமாம்!
- 'யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலியே'... 'இறங்கிய வேகத்தில் எகிறிய கொரோனா '.... 'என்ன செய்ய போறோம்'... அச்சத்தில் மக்கள்!