'ஒரு மணி நேரத்திற்கு இத்தனை கோடியா'??... 'லாக்டவுன் நேரத்திலும் மனுஷன் வேற லெவல் பண்ணிட்டாரு யா'... ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பெருந்தொற்று காலத்தில் அம்பானியின் சொத்துமதிப்பு குறித்து ஆக்ஸ்பாம் (OXFAM) ஆய்வறிக்கையின் மூலம் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸானது பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மிகவும் ஏழைகளாகவும் மாற்றியுள்ளது.
கொரோனா தொற்று பரவிய முதல் மாதத்தில் பங்குச் சந்தை சரியத் தொடங்கியதும், பங்குகளின் மதிப்பு குறைந்து அவற்றை வைத்திருப்போரின் சொத்து மதிப்பு வீழ்ச்சி கண்டது.
ஆனால் 9 மாதங்களுக்கு பிறகு நிலைமை தலைகீழானது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது அதிலிருந்து மீள பெருநிறுவன உரிமையாளர்களுக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டது.
ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரத்திலிருந்து மீள சில மாதங்களே ஆனதாக ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்திற்குள் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது.
மார்ச் 18 ஆம் தேதி 36.8 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்துமதிப்பு, தற்போது 78.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. போர்ப்ஸ் பத்திரிக்கையில் உலக செல்வந்தர் பட்டியலில் 21 ஆவது இடத்திலிருந்த அம்பானி, தற்போது 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும், லாக்டவுன் காலத்தில் மட்டும் முகேஷ் அம்பானி, ஒரு மணி நேரத்துக்கு ரூ.90 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின்' இன்றைய (26-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- 'இன்சூரன்ஸ் போடுறவங்க தான் டார்கெட்'... 'பக்காவா ஸ்கெட்ச் போட்ட கும்பல்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'தமிழகத்தின்' இன்றைய (25-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- 'அதிரடியாக புகுந்த அதிகாரிகள்'...'கட்டுக்கட்டாக கரன்சிகள்'... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- 'ஊரடங்கில் பணக்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்'... 'ஆனா மாச சம்பளக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும்'?... அதிரவைக்கும் அறிக்கை!
- 'மூக்குல ஸ்ப்ரே பண்ணிகிட்டா போதும்.. 99.9% கொரோனாவ உண்டு இல்லன்னு பண்ணுதா?'.. ‘குறிப்பிட்ட’ தடுப்பு மருந்து தொடர்பான நம்பிக்கை தரும் ஆய்வு முடிவு!
- 'ஏடிஎம் சென்டருக்கு போறப்போ அக்கவுண்ட்ல பணம் இருந்துச்சு...' 'மெஷின்ல பணம் எடுக்க தெரியல...' 'அடுத்த நாள் அக்கவுண்ட்ல பணம் இல்ல...' - ATM சென்டர்ல இளைஞர் செய்த மோசடி...!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'சப்வேயில் இருக்கும் போது ஒருவரிடம் மற்றோருவர் பேசக்கூடாது!'.. 'செல்போன்ல கூட பேசக்கூடாது!'.. இது என்னங்கடா புது ட்விஸ்டா இருக்கு?
- 'காதலிக்காக தனியார் நிறுவனரின் பார்ட்டி'.. ஜன்னல் வழியே கண்ட ‘அதிர்ச்சி’ காட்சி!.. போலீஸ் வந்து பார்த்தபோது அப்படியே ‘தலைகீழாய்’ மாறிய ‘டிவிஸ்ட்’!