'திட்டி தீர்த்த நெட்டிசன்கள்'... 'புதிய அதிரடி ஆஃபரை அறிவித்த ஜியோ'...வாடிக்கையாளர்களை கவருமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜியோவில் போன் கால்கள் இனி இலவசம் கிடையாது  என்ற  அறிவிப்பை ஜியோ வெளியிட்ட நிலையில் புதிய ஆஃபரை ஜியோ அறிவித்துள்ளது.

ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த இலவச அழைப்புகள் இனி கிடையாது என அறிவித்தது. இது அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அதன்படி ஜியோவில் இனி ஒரு போன் காலுக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் இணைய சேவை வழங்கப்படும் என ஜியோ அறிவித்தது. ஆனால் இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் கட்டண அறிவிப்பால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்களை கவர, ஜியோவில் ரீசார்ச் செய்யும் வாடிக்கையாளர்கள் முதன்முறை 30 நிமிடம் இலவசமாக போன் கால் பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் ரீசர்ச் செய்து முதல் 7 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜியோவின் கட்டண வசூலிப்பு ஜனவரி 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இந்த அறிவிப்பால் வோடோஃபோன், ஏர்டெல், ஐடியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

JIO, RELIANCE JIO, CUSTOMERS, FREE TALK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்