அம்பானி வாங்கிய புது ஹோட்டல் - விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரபல  தொழிலதிபரான முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள 'ஸ்டோக் பார்க்' என்னும் கிளப்பை வாங்கினார். இது உலகளவில் பெரும்  பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், முகேஷ் அம்பானி தற்போது அமெரிக்காவின் புகழ்பெற்ற 'மாண்டரின் ஓரியண்டல் நியூயார்க்' என்ற ஹோட்டலை வாங்கியுள்ளார்.

Advertising
>
Advertising

 மாண்டரின் ஓரியண்டல் நியூயார்க்

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் சென்ட்ரல் பார்க் அருகே இந்த பிரம்மாண்ட மாண்டரின் ஓரியண்டல் நியூயார்க் நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் 248 அறைகள், நடன விடுதிகள், ஸ்பா மற்றும் மதுபானக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவின் பிரபல தலைவர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வருவது வழக்கம்.

ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் கைமாறிய குழந்தை... நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் குடும்பத்துடன் இணைப்பு!

விலை எவ்வளவு?

இந்நிலையில் இந்தியாவின் பிரபல தொழிலதிபரும் திருபாய் அம்பானியின் மகனுமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மாண்டரின் ஓரியண்டல் நியூயார்க் ஹோட்டலின் 73.37 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதற்காக 730 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகத் தரமான ஹோட்டல்

சர்வதேச அளவிலான 'போர்ப்ஸ் பைவ் ஸ்டார் ஹோட்டல்', 'போர்ப்ஸ் பைவ் ஸ்டார் ஸ்பா' உள்ளிட்ட பல விருதுகளை இந்த ஹோட்டல் வென்றுள்ளது. இதேபோல, மும்பை பாந்த்ரா காம்ப்ளக்சில் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டுக் கூடம் அடங்கிய ஹோட்டலையும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டி வருகிறது.

வருது.. வருது.. இந்த வருசம் ஜல்லிக்கட்டு... தமிழக அரசு சொல்வது என்ன? பரபரப்பு தகவல்கள்!!

இந்தியாவைப் பொறுத்தவரையில் டாட்டா குழுமம் ஏற்கனவே நட்சத்திர ஹோட்டல் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இதேபோல, சர்வதேச அளவிலான ஹோட்டல் தொழிலில் ரிலையன்ஸ் நிறுவனமும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.

RELIANCE INDUSTRIES, MANDARIN ORIENTAL NEW YORK, MUKESH AMBANI, முகேஷ் அம்பானி, மாண்டரின் ஓரியண்டல் நியூயார்க்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்