கொரோனாவுல இருந்து மீண்டவங்க... 'கட்டாயம்' இதெல்லாம் பண்ணனும்: சுகாதாரத்துறை

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்கள் கண்டிப்பாக இதெல்லாம் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதுகுறித்த தகவல்களை கீழே பார்க்கலாம்.

* வீடுகளில் 14 நாட்கள் தங்களது குடும்பத்தினரிடம் இருந்து விலகியே தனிமையில் இருக்க வேண்டும்.

* டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதுடன், அவர்கள் கூறிய ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

* குடும்பத்தினர் உடன் கூட தொடர்பில் இருக்கக் கூடாது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து மற்ற அறைகளுக்கு செல்வதை தவிர்ப்பதுடன், வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.

* கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள், தங்கியுள்ள அறையை அடிக்கடி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* மனச்சோர்வு ஏற்படாமல் இருக்க பாடல் கேட்பது, நடனமாடுவது, செல்போனில் உறவினர்களுடன் உரையாடுவது போன்ற செயல்களை செய்ய வேண்டும்.

* முக்கியமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீட்டு தனிமையில் இருப்பவர் மதுபானங்கள் குடிக்க கூடாது. புகையிலை மற்றும் பிற மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்