"பாவம்யா இந்த 'போட்டோகிராபர்'ன்னு ஊரே பொலம்புச்சு..." ஆனா, அந்த வைரலான ’வீடியோ’ பின்னாடி இருந்த... 'உண்மையான கதையே வேற!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சில தினங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி ஒன்றில், போட்டோகிராபர் ஒருவரை மணமகன் ஒருவர் அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வேற லெவலில் வைரலாகியிருந்தது.

சுமார் 45 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் என இருவரையும் இணைத்து புகைப்படம் எடுக்க ஆரம்பிக்கும் போட்டோகிராபர், சில வினாடிகளுக்கு பின் மணப்பெண்ணை மட்டும் தனியாக போட்டோ எடுக்க ஆரம்பிக்கிறார். அது மட்டுமில்லாமல், பெண்ணின் முகத்திலும் கைவைத்து அவரை சரி செய்து கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, கடுப்பான புது மாப்பிள்ளை, போட்டோகிராபரை ஓங்கி அறைகிறார்.

இதனைக் கண்டு, மறுகணமே மணப்பெண் கொட்டிச் சிரிக்க ஆரம்பித்த நிலையில், தனது சிரிப்பை தொடர்ந்து அடக்க முடியாமல், மேடையில், தரையிலேயே விழுந்து தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருக்கிறார். இது தொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி அதிகம் வைரலாகியிருந்தது.



பலர் அந்த போட்டோகிராபரின் நிலைமையை எண்ணி அனுதாபப்பட்டனர். மேலும் சிலர், பிராங்க் வீடியோ என்றும் குறிப்பிட்டிருந்தனர். அதே போல, இது தொடர்பான புகைப்படங்களும் அதிகம் மீம்ஸ்களாக பகிரப்பட்டு வைரலானது.

 

இதனையடுத்து, தற்போது அந்த வீடியோவின் பின்னாலுள்ள உண்மைக் காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில், மணப்பெண் கோலத்தில் நிற்பவர் பெயர் அனிக்ரித்தி சவுகான் ஆகும். சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் நடிகையான இவர், வைரலான அந்த திருமண மேடை வீடியோ, தான் நடித்த திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சியாகும் என தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்த வீடியோவை பகிர்ந்தவருக்கு நன்றி தெரிவித்த அனிக்ரித்தி, தான் நடித்த படத்தின் பெயரைக் குறிப்பிட்டு தனது இன்ஸ்டாவிலும் தான் விழுந்து விழுந்து சிரிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்