இனி வாடிக்கையாளர்கள் ரூபாய் '50 ஆயிரம்' தான் எடுக்க முடியும்... ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வந்த 'பிரபல' வங்கி!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனியார் வங்கியான எஸ் பேங்க், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வாராக்கடன் அதிகரித்ததால் எஸ் பேங்க் தொடர்ந்து நிதிச்சிக்கலில் தவித்து வந்தது. இதையடுத்து எஸ் பேங்க் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ் பேங்கை நிர்வாகம் செய்திட எஸ்பிஐ வங்கியின் முன்னாள் அலுவலர் பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் எஸ் பேங்க் கொண்டுவரப்பட்டுள்ளது. கடன் சுமையிலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. எஸ் பேங்க்கின் நிர்வாகக் குழு முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் தற்போது அதிலிருந்து ரூ. 50,000 வரையே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மருத்துவம் மற்றும் திருமணம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு 50,000-க்கு மேல் பணம் எடுக்க வேண்டுமென்றால் வங்கி மேலாளரிடம் தெரிவித்து அவரது அனுமதியுடன் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் யாரும் அச்சப்படத்தேவையில்லை. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த அறிவிப்பானது உடனடியாக அமலுக்கு வருகிறது,'' என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘காரில்’ ஏற்றியதைப் பார்த்து ‘அதிர்ச்சியடைந்த’ உறவினர்கள்... வழிமறித்து ‘அடித்து’ உடைத்ததால் ‘பரபரப்பு’... ‘காதல்’ கணவர் செய்த ‘கொடூரம்’...
- ‘குறைந்த’ விலையில் தினமும் ‘5 ஜிபி’ டேட்டா... ‘90 நாட்கள்’ வேலிடிட்டி... ‘பிரபல’ நிறுவனத்தின் ‘சூப்பர்’ பிளான்!...
- அதே ‘பழைய’ பிளான்களின் விலையில்... ‘டேட்டா’ மட்டும் ‘டபுள்’!... ‘அசத்தல்’ ஆஃபரை அறிவித்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...
- கல்லூரி ‘மாணவிகளுடன்’ வீடியோ... அவர்களுக்கே ‘தெரியாமல்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... போலீசாரிடம் சிக்கிய ‘டிக்டாக்’ இளைஞர்...
- ‘சனிக்கிழமைல இருந்து வெளியவே வரல’... மனைவி, குழந்தைகள் உட்பட ‘படுக்கையறையில்’ கிடைத்த ‘4 சடலங்கள்’... ‘ஐடி’ ஊழியர் செய்த ‘உறையவைக்கும்’ காரியம்...
- ‘என் பேரு பிரியானு சொன்னாங்க... ஒரு காலுக்கு ரூ 1000... போட்டோவுக்கு தனியாக பணம்’... ‘சென்னை’ போலீசாரை ‘அதிரவைத்த’ இன்ஜினியர்...
- ‘ரூ 27 கோடி’ பணம்... ‘3 கிலோ’ தங்கம்... ‘இத’ பண்ணுங்க ‘எல்லாமே’ சரியாகிடும்... கணவரை இழந்த பெண்ணிடம்... ‘கைவரிசையை’ காட்டிய நபர்...
- தினமும் ‘3 ஜிபி’ டேட்டா... ‘71 நாட்கள்’ வரை கூடுதல் ‘வேலிடிட்டி’... ‘போட்டி’ போட்டுக்கொண்டு ‘ஆஃபரை’ அறிவிக்கும் பிரபல நிறுவனங்கள்...
- '2000 ரூபாய் நோட்டுகளை ATM'ல போடாதீங்க'... 'பரிவர்த்தனையும் கிடையாது'... வங்கியின் அதிரடி அறிவிப்பு!
- ‘10 ஆயிரம்’ ரூபாய் ஆஃபருக்கு ‘ஆசைப்பட்டு’... 2 ஆண்டுகளில் ‘33 பேரால்’... ‘கோடிகளை’ இழந்த பரிதாபம்... போலீசாருக்கு வந்த ‘அதிர்ச்சி’ புகார்...