ரவீந்திர ஜடேஜா வெளியிட்ட 'வீடியோ'.. அதற்கும் புஷ்பா படத்திற்கும் இருக்கும் கனெக்ஷன்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீபத்தில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருந்த புஷ்பா திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல், திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.

ரவீந்திர ஜடேஜா வெளியிட்ட 'வீடியோ'.. அதற்கும் புஷ்பா படத்திற்கும் இருக்கும் கனெக்ஷன்..
Advertising
>
Advertising

முற்றிலும் வேறொரு பரிமாணத்தில், அல்லு அர்ஜுனை இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர் சுகுமார். அதே போல இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வசனங்கள், பாடல்கள் ஆகியவற்றையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, நடிகை சமந்தா நடனமாடி இருந்த 'ஒ அந்தவா மாமா' என்ற பாடல், வேற லெவலில் வைரலானது. இந்த பாடலை, ரசிகர்கள் அனைவரும் தியேட்டரில் கொண்டாடித் தீர்த்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ravindra jadeja shares video in insta related to pushpa movie

ஒரு பக்கம், அமோக வரவேற்பை இந்த பாடல் பெற்றிருந்தாலும், ஆண்களை அவமதிக்கும் வகையில்  பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. என்ன தான் சர்ச்சையக் கிளப்பினாலும், பலரின் பிளேலிஸ்ட்களை 'ஒ அந்தவா' பாடல் தான் ஆக்கிரமித்து வருகிறது. மற்ற பாடல்களான 'ஸ்ரீவள்ளி' , 'சாமி சாமி' பாடல்களுக்கும் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), புஷ்பா படம் தொடர்பான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் பல இடங்களில், தனது தாடியை வருடிக் கொண்டே, 'புஷ்பா, புஷ்ப ராஜூ, தெக்கேதலே (Thaggedhe le)' என்ற ஒரு வசனத்தை பேசுவார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 எங்கு நடக்கும்??.. பிளான் பி ரெடி..

ரசிகர்கள் பலர், அல்லு அர்ஜுன் நடிப்பது போலவே செய்து காட்டி, அதனை வீடியோக்களாகவும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது, அந்த வரிசையில் தான் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவும் இணைந்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வீடியோவில், அல்லு அர்ஜுனைப் போலவே, தாடியை வருடி, நடித்துக் காட்டி அசத்தியுள்ளார் ஜடேஜா.

 

சற்று முன்பு, இந்த வீடியோவை அவர் வெளியிட்டிருந்த நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

RAVINDRA JADEJA, ALLU ARJUN, PUSHPA, THAGGEDE LE, SAMANTHA, அல்லு அர்ஜுன், ரவீந்திர ஜடேஜா, புஷ்பா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்